தோற்றுப் போன விஜய்.. திரைக்கதை அரசியலும் வெற்று விளம்பரங்களும் வேஸ்ட்! நயினார் நாகேந்திரன் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைக்கதை அரசியலும் வெற்று விளம்பரங்களும் தோற்றுப்போனது! முதல் மழைக்கே சென்னையை தத்தளிக்க விட்டிருப்பது ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் திறனின்மையை காட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," வானிலை மையம் முன்கூட்டியே எச்சரித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், நேற்று இரவு பெய்த ஒருநாள் மழைக்கே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருப்பது விஜய் தலைமையிலான தவெக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாகும்.

Nainar Nagendran Vijay Chennai Rain

பன்னாட்டு விமான நிலையம், ஜி.எஸ்.டி சாலை, கணேசபுரம் சுரங்கப்பாதை என பிரதான வழிகள் முடங்கி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கார்கள் தண்ணீரில் மூழ்கி மக்கள் தத்தளிப்பது, அரசு இயந்திரம் செயலிழந்துவிட்டதையே காட்டுகிறது.

"மாற்றத்திற்கான அரசு" என வாய்ஜாலம் பேசிய திரு. ஜோசப் விஜய்யின் அரசு, மழைநீர் வடிகால் பணிகளிலும் தூர்வாரலிலும் காட்டிய அலட்சியமே இந்தப் பேரழிவுக்கு முழுமுதற் காரணமாகும். வடிகால்கள் தூர்வாரப்பட்டுவிட்டன.

ராட்சத மோட்டார்கள் தயார் எனக் காகிதத்தில் கணக்கு காட்டி மக்களின் பல கோடி ரூபாய் வரிப்பணத்தை வீணடித்ததே தவிர, மழைநீரை வடியவைக்கக் களத்தில் எந்தவொரு உருப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆட்சி நிர்வாகம் என்பது திரையில் பேசும் பஞ்ச் வசனங்களோ, விளம்பர உத்திகளோ அல்ல; களத்தில் நின்று மக்களின் துயர் துடைக்கும் கடமை என்பதை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் உணர வேண்டும்.

மக்கள் வெள்ளத்தில் கண்ணீர் வடிக்கும்போது மௌனம் காக்காமல், தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்க்கப்படும் பெருமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யவும், துரித நிவாரணங்களை வழங்கவும் தவெக அரசு உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையேல் மக்களின் கடுமையான கோபத்திற்கு ஆளாக நேரிடும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+