சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நயினார் தலைமையில் திமுக ஆதரவு பாஜக எம்.எல்.ஏக்கள் அணி? முதல்வர் ஸ்டாலினுக்கு நெல்லையில் புகழாரம்!

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவின் 2 எம்.எல்.ஏக்கள் தொடர்பில் உள்ளார்கள்; தலைமை இசைவு தெரிவித்தால் தூக்கிவிடுவோம் என திமுகவின் தருமபுரி தொகுதி எம்.பி. டாக்டர் செந்தில்குமார் தெரிவித்த கருத்து உறுதியாகும் போல இருக்கிறது.

திமுகவின் மூத்த தலைவரான ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா மகன், அண்மையில் பாஜகவில் இணைந்தார். அதனை பாஜக பெருமிதத்துடன் கொண்டாடித் தீர்த்தது. அப்போது திருச்சி சிவா மகனுக்கு பதில் கொடுத்த திமுக எம்.பி. செந்தில்குமார், திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற_உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் துக்கிவிடுவோம் என கூறியிருந்தார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்கள் திருமணத்திற்கு உதவியாக இருந்தது..தாலிக்கு தங்கம் திட்டம் தொடர வேண்டும்.. நயினார் நாகேந்திரன் பெண்கள் திருமணத்திற்கு உதவியாக இருந்தது..தாலிக்கு தங்கம் திட்டம் தொடர வேண்டும்.. நயினார் நாகேந்திரன்

எம்.எல்.ஏக்கள் தனி ஆவர்த்தனம்

எம்.எல்.ஏக்கள் தனி ஆவர்த்தனம்

தமிழகத்தில் பொதுவாக ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள், ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருப்பது வழக்கமானதுதான். அதிமுகவிலேயே திமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி இருந்த காலம் உண்டு. தேமுதிகவில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி இருந்தது. அதிமுக ஆட்சியில் இருந்த போது அக்கட்சிக்கு ஆதரவான காங். எம்.எல்.ஏக்கள் அணி செயல்பட்டது. இந்த அணிகள் எல்லாம் சட்டசபையிலும் பொதுவெளியிலும் பரப்பை ஏற்படுத்தின.

திமுக பி டீம் ஓபிஎஸ்?

திமுக பி டீம் ஓபிஎஸ்?

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சட்டசபையில் திமுகவினரை பார்த்து சிரித்துவிட்டார் ஓபிஎஸ் என்பதற்காகவே அவரை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தவர் சசிகலா. அதனாலேயே ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அன்று முதல் இன்று வரை திமுகவின் பி டீம் ஓபிஎஸ் என்ற முத்திரை போகவே இல்லை. அதாவது அதிமுகவின் திமுக ஆதரவு டீம் ஓபிஎஸ் கோஷ்டி என்ற பழிசொல் போகவே இல்லை.

விவாதமாகும் கட்சி தாவல்கள்

விவாதமாகும் கட்சி தாவல்கள்

இப்போதும் அதே கதைதான் தொடருகிறது. திமுகவின் 10 எம்.எல்.ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர் என இபிஎஸ் சொல்ல, உங்க கட்சியின் 50 எம்.எல்.ஏக்கள், 2எம்.பிக்கள் எங்களுடன் பேசுகிறார்கள் என்கிறது திமுக. அதேபோல் பாஜக எம்.எல்.ஏக்கள், திமுகவுக்கு தாவுகிறார்கள் என்ற அரசல் புரசல் பேச்சுகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

நயினார் தலைமையில் திமுக ஆதரவு அணி?

நயினார் தலைமையில் திமுக ஆதரவு அணி?

இப்படியான பரபரப்புகளுக்கு மத்தியில் நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆஹோ ஓஹோவன புகழ்ந்து தள்ளியிருக்கிறார் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன். இத்தனைக்கும் ஒட்டுமொத்த பாஜகவும் திமுக அரசை மிக மிக கடுமையாக வசைபாடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் நயினார் நாகேந்திரன் புகழ்ந்து தள்ளியிருப்பது பலரது உருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. அதனால்தான் பாஜகவில் திமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி உதயமாகிவிட்டதா? என்கிற விவாதமும் எழுந்திருக்கிறது.

English summary
Sources said that Nainar Nagendran may lead DMK Support BJP MLAs Faction in the Assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X