அதிர்ச்சி ரிப்போர்ட்!! குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் அதிக உயிரிழப்புகள்.. சென்னை தான் மிக மிக மோசம்
சென்னை: மது அருந்திவிட்டு வாகன ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் தான் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ 431 கோடிக்கு மது விற்பனையானது.
அதேநேரம் மறுபுறம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் ஷாக் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை தான் மோசம்
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் தலைநகர் சென்னையில் தான் மிக மோசமாக உள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் நாட்டில் உள்ள 53 மெகா நகரங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 50% அதிகமான உயிரிழப்புகள் சென்னையில் பதிவாகியுள்ளது. அதாவது கடந்த ஓர் நாட்டில் நாட்டின் 53 நகரங்களில் 462 பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 236 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

4இல் ஒரு உயிரிழப்பு சென்னையில்
அதேபோல மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் மாநிலத்தில் பதிவான உயிரிழப்புகளில் 83% சென்னையில் மட்டும் ஏற்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு உயிரிழப்புகளை ஏற்படுத்திய விபத்துகளில் 4இல் ஒன்று சென்னையில் நடந்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஓட்டுநர் உரிமங்கள்
அதேநேரம் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக சஸ்பெண்ட் செய்யப்படும் ஓட்டுநர் உரிமங்கள் கடந்த ஆண்டு குறைந்துள்ளது. 2019ஆம் ஆண்டு மொத்தம் 20,212 ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 7,290 ஆகக் குறைந்துள்ளது. முன்னதாக 2018இல் 45,113 ஓட்டுநர் உரிமங்கள், 2017 இல் 30,393 ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

என்ன காரணம்
அதேநேரம் ஒட்டுமொத்தமாகக் கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020இல் தமிழ்நாட்டில் விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளதாகப் போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குடிபோதையில் ஏற்படும் விபத்துகள் ஏன் அதிகரித்தது என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாலேயே சஸ்பெண்ட் செய்யப்படும் ஓட்டுநர் உரிமங்கள் குறைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications