சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாஞ்சில் சம்பத் போட்ட போடு.. "ஆளுநர் ரவியை நாங்களே வீட்டுக்கு அனுப்பிடுவோம்".. செம டென்ஷனில் பாஜக

நீட் தேர்வு தீர்மானத்தில் நடவடிக்கை வேண்டும் என்று கேட்கிறார் நாஞ்சில் சம்பத்

Google Oneindia Tamil News

சென்னை: நாகர்கோயிலில் மூத்த தலைவரும், திமுக பேச்சாளருமான நாஞ்சல் சம்பத் பேசிய பேச்சு, பாஜகவுக்கு டென்ஷனை எகிற வைத்து வருகிறது.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, தமிழக சட்டப்பேரவையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அதை அனுப்பி வைத்தது.

திமுகவில் முட்டி மோதும் 3 வி.ஐ.பி.க்கள்! யாருக்கு சிம்மாசனம்? பரபரக்கும் கோவை மேயர் ரேஸ்!
தீர்மானம் அனுப்பப்பட்டு சுமார் 142 நாட்கள் கடந்த நிலையில், அதாவது சமீபத்தில் தமிழக அரசு அனுப்பி வைத்திருந்த நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை ஆளுநர் ஆர்என் ரவி நிராகரித்தார்...

 நிராகரிப்பு

நிராகரிப்பு

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது. தமிழக கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைத்திருக்கிறது திமுக அரசு.. இதன்பேரில் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பார்? நீட் தேர்வு விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? தமிழக ஏழை மருத்துவ மாணவர்களுக்கு ஒரு விடிவு காலம் கிடைக்குமா என்பன போன்ற எதிர்பார்ப்புகள் பல ஏற்பட்டுள்ளன.

 ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

ஆனால், இப்போது அனுப்பப்பட்டுள்ள தீர்மானத்தையும் ஆளுநர் திருப்பி அனுப்ப உள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் கூறுகின்றன.. நீட்விலக்கு மசோதாவை மட்டுமல்ல, இனி ஒன்றிய அரசோடு முரண்படும் எந்த சட்ட மசோதாவுக்கும் அனுமதியில்லை என்றும், அதை திருப்பி அனுப்புவது என்றும் ராஜ்பவன் தீர்மானித்திருப்பதாக வட்டாரங்கள் சொல்கின்றன... இப்படிப்பட்ட சூழலில்தான் நாஞ்சில் சம்பத் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்டுத்தி வருகிறது.

 உள்ளாட்சி

உள்ளாட்சி

நாகர்கோவில் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்தார்... அப்போது அவர் பேசியபோது, "நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு 100 சதவீதம் வெற்றி என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.. இந்த தகவலை அறிந்து எதிர்க்கட்சியினர் வன்முறை அரசியல் செய்து லாபம் காண முயற்சிக்கின்றனர். நாங்கள் ஆட்சி அமைத்து 8 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

 திருப்பி அனுப்புவோம்

திருப்பி அனுப்புவோம்

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்... மறுபடியும் சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது... ஆனால் அதையும் அவர் திரும்ப அனுப்பினால், நாங்கள் அவரை அவரது சொந்த ஊருக்கு மாற்ற நடவடிக்கை எடுப்போம்" என்று கூறியுள்ளார்.. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

English summary
neet: DMK Nanjil Sampath campaign in Nagarcoil and says about TN Governor Ravi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X