அப்பாயின்ட்மென்ட் தராத அமித்ஷா?.. "நீட் தேர்வு".. மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துகட்சி கூட்டம்
நாளை காலை நடக்கிறது அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம்
சென்னை: நீட் தேர்வு தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நீட் தேர்வு விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.. நீட் தேர்வுக்கு திமுக உட்பட அனைத்து கட்சிகளுமே தங்கள் எதிர்ப்வை காட்டி வருகின்றன.
இதையடுத்து, கடந்த அதிமுக ஆட்சியில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.. ஆனால் இப்போது வரை மத்திய அரசு அதற்கு ஒப்புதல் தரவே இல்லை.

அமித்ஷா
இந்த விவகாரம் குறித்து நேற்றும் சட்டப்பேரவையில் முதல்வர் பேசினார்.. அப்போது, "இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குகோரும் சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீட்தேர்வு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க, அனைத்துக் கட்சி எம்.பி.க்களைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை.

நடவடிக்கைகள்
மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களை மத்திய உள்துறை அமைச்சர் சந்திக்க மறுப்பது மக்களாட்சியின் மாண்புக்கு எதிரானது. நீட் தேர்வுக்கு எதிரான அரசியல், சட்ட, மக்கள் போராட்டம் தொடரும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும்" என்று அறிவித்திருந்தார்.

கடிதம்
அதன்படியே, தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியாகி உள்ளது.. அதில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6-ம் தேதி நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார். இதுகுறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு
அதன்படி நாளை காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்டமுன்வரைவு மீது ஆளுநர் இதுவரை முடிவெடுக்காத நிலையில், அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி, இந்த அனைத்து கட்டசி கூட்டத்தில் கூடி ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வன்னி அரசு வந்ததும் வராததுமா செய்த வேலை.. அரசு அதிகாரிகள் பங்கேற்ற தாட்கோ கூட்டத்தில் என்ன நடந்தது -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications