சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீட் தேர்வு..தேர்வு மையங்களின் முழு விபரங்களை வெளியிட்ட தேசிய தேர்வுகள் முகமை

நீட் தோ்வு மையங்கள் குறித்த விவரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அவற்றை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தகுதி தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் ஜூலை 17ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது.

NEET examination centers details http://neet.nta.nic.in

இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தொடங்கி மே 20ம் தேதியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 18 லட்சத்து 72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 42,286 பேர் பதிவு செய்துள்ளனர். திட்டமிட்டபடி நீட் தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அவற்றை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வெளியிடப்படும்.

கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதாவது சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
NEET Exam National testing Agency has published full details of the examination centers. The details of the cities where the NEET examination centers have been set up are now out. Students can check them by visiting the website http://neet.nta.nic.in.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X