காற்றாலையில் காற்று கம்மி! BSNL பள்ளம் தோண்டிடுச்சி! மின்வெட்டுக்கு தவெக இதுவரை சொன்ன காரணங்கள்!
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து தவெக இதுவரை சொன்ன காரணங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் தற்போது வெயில் அதிகம் இருப்பதால் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளதுதான்.
எனவே சென்னையில் ராயபுரம், வேளச்சேரி, தாம்பரம், மடிப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு ஏற்படுகின்றன. இதனால் கொசு கடியில் குழந்தைகளை வைத்து கொண்டு தூங்கவும் முடியாமல் பூச்சி பொட்டு ஏதாவது வீட்டினுள் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

மின்வெட்டு
தவெக அரசு பொறுப்பேற்றது முதலே ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நள்ளிரவு நேரங்களில் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
அறிவிக்கப்படாத மின்வெட்டு
அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை போல் தொழில்துறை, விவசாயத் துறையும் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக், ஜவுளி உள்ளிட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்துள்ளது. "மூலப்பொருட்களும் வீணாகி நஷ்டத்தை கொடுக்கிறது, வேலையாட்களும் ஊதியம் இல்லாமல் தவிக்கிறார்கள்" என ஆலை உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
தண்ணீர் இல்லை
விவசாயத் துறையை பார்த்தால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. வரும் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்த நிலையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினால்தான் மகசூலை பார்க்க முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.
ஸ்டாலின், இபிஎஸ் கண்டனம்
இது குறித்து முன்னாள் முதல்வர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். தவெக கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் விழாக்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
நீலாங்கரையிலேயே பவர் கட்
முதல்வர் விஜய் வசிக்கும் நீலாங்கரையிலேயே மின்வெட்டு என கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு இதுவரை தவெக அரசு சொன்ன பதில்கள், விளக்கங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். திமுகவினரால் மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது என ஆரம்பத்தில் மின்துறை அமைச்சர் நிர்மல் குமாரும், இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷும் தெரிவித்திருந்தனர். அதாவது ஒரு சில மின்வாரிய ஊழியர்களை கையில் போட்டுக் கொண்டு திமுக மின்வெட்டை ஏற்படுத்துவதாகவும் அவர் சொல்லியிருந்தனர்.
என்ன காரணம்
அடுத்ததாக பியூஸ் கேரியர்களை திருடிச் செல்வதால் மின்வெட்டு ஏற்படுகிறது என்றார். அதுகுறித்த வீடியோவையும் நிர்மல் குமார் பகிர்ந்தனர். ஆனால் காலையில் திருடும் பியூஸ் கேரியருக்கு இரவில் எப்படி மின்வெட்டு ஏற்படும் என்று திமுகவினர் கேட்டு தவெகவினரை திணறடித்தார்கள்.
அடுத்தபடியாக தமிழகத்தில் மின்வெட்டே எங்கும் இல்லை என்றார்கள். பின்னர் மெல்ல மெல்ல மின்சார பற்றாக்குறை இருப்பதால் வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க போகிறோம் என தவெக அரசு கூறியிருந்தது.
இதையடுத்து பஞ்சாபில் கூட தான் 14 மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது என்று நிர்மல் குமார் தெரிவித்திருந்தார். பிஎஸ்என்எல் கேபிள் தோண்டும் போது மின்வயர் கட்டாகி மின் வெட்டு ஏற்பட்டது, மின்துரை ஊழியர்கள் மத்தியில் 1 சதவீத கருப்பு ஆடுகள் இருப்பதாக நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.
காற்றாலை மின்சாரம்
இப்படியாக நிர்மல்குமாரும் ரமேஷும் தினமும் ஒரு காரணத்தை சொல்லி வந்த நிலையில் மூத்த அமைச்சர் செங்கோட்டையனோ, காற்று சுழலும் வேகம் குறைவாக இருப்பதால் காற்றாலை மின்சாரம் கிடைப்பதில்லை, கர்நாடகா, ஆந்திரா, புதுவையில் 4 மணி முதல் 8 மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. வெளியில் எங்கேயும் மின்சாரம் வாங்க முடியவில்லை, அதுதான் சிக்கலாகி, மின்வெட்டு ஏற்படுகிறது என்றார்.
இப்படியாக நாள்தோறும் ஒரு காரணத்தை தவெக அரசு கூறிவந்தது. ஆனால் இதுவரை மின்வெட்டுக்கான உருப்படியான காரணத்தை ஏதும் சொல்லவில்லை என்பதுதான் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களாக உள்ளது.


Click it and Unblock the Notifications
