சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பள்ளி மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்பா?.. சர்ச்சையாகும் தமிழக அரசின் முடிவு.. பின்னணி என்ன?

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பை கொண்டு வர தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கல்வியில் செய்யப்படும் மாற்றங்கள்... சர்ச்சையாகும் தமிழக அரசின் முடிவு...

    சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பை கொண்டு வர தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    மத்தியில் இரண்டாவது முறையாக பாஜக கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து தொடர்ந்து கல்வி மீது கவனம் செலுத்தி வருகிறது. கல்வியில் பெரிய மாற்றம் கொண்டு வரும் வகையில் புதிய கல்வித் திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டு வருகிறது.

    அதேபோல் தமிழக அரசும் நிறைய மாற்றங்களை தமிழக பள்ளிகளில் கொண்டு வர முயன்று கொண்டு இருக்கிறது. முக்கியமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது தொடர்பாக நிறைய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் இனி நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்றைய தலைமுறையினரிடையே பாச உணர்வு குறைந்துள்ளது அதை நாங்கள் மேம்படுத்த போகிறோம், மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்று இந்த திட்டத்தை அமல்படுத்த உள்ளோம்.

    என்ன தற்காப்பு

    என்ன தற்காப்பு

    வாரம் ஒருநாள் அரசு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு நடத்தப்படும். அதேபோல் தவறான நபர்களிடம் இருந்து தங்களை பாதுகாக்க அடுத்த மாதத்தில் இருந்து தற்காப்புக்கலை வகுப்பு நடத்தப்படும், என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தமிழக அரசின் இந்த முடிவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    என்ன சர்ச்சை

    என்ன சர்ச்சை

    இது பல நாட்களாக பல்வேறு இந்து அமைப்புகள் வைத்த கோரிக்கை ஆகும். இந்து மதத்தின் நன்னெறி கருத்துக்களை சிறு வயதில் மாணவர்களிடம் பதிய வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை வைத்து வந்தது. இதற்காக நன்னெறி வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் கோரி வந்தது.

    அதே முடிவு

    அதே முடிவு

    தற்போது அதே முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இதனால் இந்த திட்டத்தின் நோக்கம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்காப்பு கலை கற்றுக்கொடுப்பது போலவே பள்ளிகளிலும் கற்றுக்கொடுக்கப்டும் என்று கூறுவதும் நெட்டிசன்களை சந்தேகத்திற்கு உள்ளாக்கி உள்ளது. யார் இதுபோன்ற வகுப்பைகளை எடுப்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

    மோசம்

    மோசம்

    இதற்கு முன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பகவத் கீதை கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டது பெரிய சர்ச்சையானது. அதன்பின் அண்ணா பல்கலைக்கழகம் பின்வாங்கி, பகவத் கீதை விருப்ப பாடம்தான் என்று கூறியது. இந்த நிலையில் தற்போது பள்ளிகளில் நன்னெறி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    என்ன எதிர்ப்பு

    என்ன எதிர்ப்பு

    இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னும் மாநில கட்சிகள் எதுவும் இதில் பெரிதாக குரல் கொடுக்கவில்லை. திமுக, மதிமுகவை சேர்ந்த சில முக்கிய உறுப்பினர்கள் இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Many parties and Netizens in Tamilnadu opposing ''Didactic class'' in Govt School.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X