சூடு பிடிக்கும் ராம ஜெயம் கொலை வழக்கு...கொலையாளிகள் குறித்து தகவல் சொன்னால் ரூ. 50 லட்சம் பரிசு
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் எனவும் தமிழக காவல் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொலையாளிகள் பற்றி தகவல் கூறுபவர்களுக்கு ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமஜெயம் கொலை செய்யப்பட்டு வரும் மார்ச் 29ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. குற்றவாளி யார் என்றும் எதற்காக ராமஜெயம் கொலை செய்யப்பட்டார் என்றும் ஒரு துரும்பைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
தமிழக காவல்துறை, சிபிசிஐடி, சிபிஐ என பலர் விசாரித்தாலும் ராமஜெயம் யாரால் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை

ராம ஜெயம் கொலை வழக்கு
திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த, 2012ம் ஆண்டு மார்ச், 29ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர், கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போதைய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தலைமையில், 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கொலையாளி யார்
கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார் ராமஜெயம். இவரது கொலை வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் உள்ள பிரபல ரவுடிகள், சந்தேகத்திற்குரிய நபர்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை விசாரித்தும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கொலையாளிகள் யார் என்று நெருங்கவே முடியவில்லை. ராமஜெயம் காலையில், வாக்கிங் செல்லும் போது கடத்தப்பட்டாரா என்பது தான் மிகப்பெரிய சந்தேகம். ராமஜெயம் தூங்கி கொண்டிருந்த போது, வெளியில் இருந்து சிலர் அழைத்துள்ளனர். வெறும் கைலி மட்டும் கட்டியதோடு ராமஜெயம் வெளியே வந்திருக்கிறார், எனவே தெரிந்த நபர்களே இந்த கடத்தல் கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு இன்று வரை உள்ளது.

சிபிசிஐடி விசாரணை
இதனையடுத்து இந்தக் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்தது. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை. ராமஜெயத்திற்கு நெருக்கமானவர்களை அழைத்து உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. எந்த துப்பும் கிடைக்காமல் கிறுகிறுத்போனார்கள். அதைத்தொடர்ந்து, கடந்த, 2017ம் ஆண்டு, ராமஜெயத்தின் மனைவி லதா தொடர்ந்த வழக்கின் காரணமாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

சிபிஐ விசாரணை
தொடர்ந்து, 4 ஆண்டுகள் சிபிஐ விசாரித்தும் வழக்கில் எந்த துப்பும் துலங்கவில்லை. ராமஜெயம் கொலையை பொறுத்தவரை போலீசாருக்கு கிடைத்த முக்கிய தடயம் அவர் பயன்படுத்திய செல்போன்களின் எண்கள் மட்டுமே. அந்த எண்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டவர்கள், இரவு நேரத்தில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் பட்டியல் தனித் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் துப்பு துலக்க பயனுள்ள தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை
இதனால், ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ராமச்சந்திரன், 'இந்த வழக்கை, தமிழக காவல்துறை விசாரிக்க வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும், வழக்கு தொடர்பாக, 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

திருச்சியில் முகாம்
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அரியலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதன், சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளர் ரவி ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது, ஏற்கனவே பல்வேறு குழுவினர் விசாரித்து வைத்துள்ள ஆவணங்களின் மீதான மேல் விசாரணையை துவக்கியது. அடுத்த அதிரடியாக, திருச்சியில் முகாமிட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு எஸ்.பி. ஜெயக்குமார், டிஎஸ்பி மதன் உள்ளிட்டோர், வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அறிக்கை தாக்கல்
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். பின்னர் அவர், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளது எனவும், சம்பவம் நடந்த காலத்தில் பணியில் இருந்த ஆறு போலீசார் உள்பட 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், உயர் அதிகாரிகளையும் விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

ரூ. 50 லட்சம் பரிசு அறிவிப்பு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது எனவும், 43 அதிகாரிகள் புலன் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் எனவும், கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரகசிய அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணையை ஜூன் 10ம் தேதி தள்ளி வைத்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications