அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுக, அதிமுக கட்சிகள் தங்களின் கூட்டணியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் புதிய கட்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் திமுக உள்ளது. மறுபுறம் திமுகை வீழ்த்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக செயல்பட்டு வருகிறது.

கூட்டணி தீவிரம்
இருகட்சிகளும் தங்களின் கூட்டணியை பலமாக்கி வருகின்றன. தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொரு ஓட்டுகளும் முக்கியம். இதனை உணர்ந்தே திமுக, அதிமுக கட்சிகள் தங்களின் கூட்டணியில் பல்வேறு சிறிய கட்சிகள் முதல் சிறிய அமைப்புகளை சேர்த்து வருகின்றன.
அதிமுகவுக்கு ஆதரவு
அந்த வகையில் தான் தற்போது அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அந்த கட்சியினர் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர். அந்த கட்சியின் பெயர் அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழகம்.
அழைத்து வந்த ராஜேந்திர பாலாஜி
கட்சியின் தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் இளங்கோவன், பொருளாளர் ஜெயரட்சகன் உள்பட பல நிர்வாகிகள் எடப்பாடிபழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு பக்கப்பலமாக இருப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இந்த அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர்.
அதிமுக கூட்டணி விபரம்
தமிழகத்தை எடுத்து கொண்டால், அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி), டிடிவி தினகரனின் அமமுக, ஜிகே வாசனின் தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய பாரதம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
தேமுதிக இணையுமா?
மேலும், தற்போது தமிழகத்தில் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது பிரேமலதா இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்பதோடு, ராஜ்யசா எம்பி கேட்பதாக கூறப்படுகிறது.
ஆனால் உடன்பாடு ஏற்படாததால் இழுபறி நீடித்து வருகிறது. இப்படியான சூழலில் பிற சிறிய கட்சிகள், அமைப்புகளின் ஆதரவையும் நழுவ விடாமல் அதிமுக பெற தொடங்கி உள்ளது.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
Election Exclusive: எல்லாம் போச்சு.. இரட்டை இலையை கருக விட்ட எடப்பாடி! திமுக ’தலைகளை’ லாக் செய்ய லட்டு மாதிரி சான்ஸ்!












Click it and Unblock the Notifications