ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் எம்.பிக்கு புதிய பதவி - மத்திய அரசு புதிய உத்தரவு
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நீதி பரிபாலன குழு உறுப்பினராக ரவீந்தரநாத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நீதி பரிபாலன குழு உறுப்பினராக ரவீந்தர நாத்தை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரவீந்தரநாத் குமார், நீதி பரிபாலன குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 3 ஆண்டுகள் இந்த பதவியில் அவர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நிர்வாக உறுப்பினர்களாக அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் குமார் மற்றும் திமுக எம்.பி தயாநிதி மாறன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேனி தொகுதியில் போட்டியிட்டு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பியானதும் அவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அமைச்சரவையில் ரவீந்தரநாத் இடம்பெறவில்லை. அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையிலும் அதிமுகவுக்கு இடம் கொடுக்கவில்லை. மாறாக தமிழக பாஜக தலைவர் எல் முருகன் இடம்பெற்றிருந்தார்.

ரவீந்தரநாத் எம்பி
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது எம்.பி ரவீந்தரநாத்தும் உடனிருந்தார்.

பாஜகவின் விருப்பம்
மகனுக்கு அமைச்சர் பதவி அளிப்பது பாஜகவின் விருப்பம் என்று சமீபத்திய பேட்டியில் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நீதி பரிபாலன குழு உறுப்பினராக ரவீந்தர நாத்தை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ரவீந்திரநாத் மூன்றாண்டுகாலம் இந்த பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள பல்கலைக்கழகம்
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள சென்னை அடுத்துள்ள செம்மஞ்சேரியில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் கடல்சார் போக்குவரத்துத் துறை பற்றிய கல்வித்திட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது . பல்கலைக்கழகத்திற்கு கொச்சி, கொல்கத்தா, மும்பை, நவி மும்பை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் வளாகங்கள் உள்ளன.

திமுக எம்.பி தயாநிதி மாறன்
தேசிய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நீதி பரிபாலன குழு உறுப்பினராக ரவீந்திரநாத் குமார் எம்.பி மற்றும் திமுக எம்.பி., தயாநிதி மாறன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications