புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிச்சிருக்கீங்களா? முதலில் இதை படியுங்க.. வெளியான குட்நியூஸ்
சென்னை: ரேஷன் கார்டு கேட்டு 2.44 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு ஜூலை முதல் புதிதாக ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 குடும்ப அட்டைகள் உள்ளன. ரேஷன் கார்டு என்பது வெறும் பொருட்கள் வாங்க பயன்படும் அட்டையாக மட்டுமின்றி, தமிழக அரசின் பல்வேறு சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டையாகவும் உள்ளது. குறிப்பாக தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு இந்த குடும்ப அட்டைகளே முக்கிய பங்காற்றுகின்றன.

வெள்ள நிவாரணம், கொரோனா நிவாரணம், பொங்கல் தொகுப்பு மற்றும் மகளிர் உரிமைத்தொகை ஆகியவை ரேஷன் கார்டு அடிப்படையில்தான் கணக்கெடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது. வருவாய் துறை வழங்கும் சான்றிதழ்களுக்கு ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளதால், முகவரி சான்றாக ரேஷன் கார்டு தான் பார்க்கப்படுகிறது.
ரேஷன் கார்டுகளை பொறுத்தவரை கடந்த 2017ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் கார்டாக மாறிவிட்டது. செல்போன் நம்பருடன் ரேஷன் கார்டு இணைக்கப்பட்டது. ரேஷன் கார்டுகளுடன் செல்போன் எண்களும் இணைக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் ரேஷன் கார்டு அடிப்படையிலேயே குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் காரணமாக புதிய ஸ்மார்ட் கார்டுக்கு பலரும் விண்ணப்பிக்க தொடங்கினர். அதனால் புதிய கார்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி நடந்தது.
ரயில் பெட்டிக்குள் பெய்த மழை.. கன்னியாகுமரி சூப்பர் பாஸ்டில் இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த பயணிகள்
கடந்த ஓராண்டில் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜூலை முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டை இன்னும் வழங்கப்படாத நிலையில், லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விடாத காவல்துறை.. நெல்லையில் சீட் பெல்ட் போடாத அரசு பஸ் டிரைவர்களை மடக்கி ஃபைன் போட்ட போலீசார்
இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "புதிதாக ரேஷன் அட்டை பெற சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். இவர்களில் தகுதியானவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்ட பின்னர் ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான பணிகள் தொடங்கும்” என்று கூறியுள்ளனர்.
இதன்படி பார்த்தால் அடுத்த மாதம் புதிய ரேஷன் கார்டுகள் ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால், புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications