’திரும்ப வந்துட்டேனு சொல்லு’ உண்மையிலேயே சமாதி நிலையில் நித்யானந்தா?பணத்துக்கு போடும் பக்கா ப்ளானா?
சென்னை : தான் மரணமடையவில்லை சமாதி நிலையில் இருக்கிறேன் என திடீர் பதிவு மூலம் மீண்டும் உலக அளவில் பேசு பொருளாக இருக்கும் நித்யானந்தா உண்மையிலேயே சமாதி நிலையில் இருக்கிறாரா அல்லது பண நெருக்கடி காரணமாக பக்தர்களை ஏமாற்றுகிறாரா என சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன?
பலாத்கார வழக்கு, கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா, அவ்வப்போது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவுகளை சமூக வலைதளங்களின் வாயிலாக ஆற்றி வருகிறார்.
இந்நிலையில் தலைமறைவாக உள்ள இவர், இந்துக்களுக்கு என தனி கைலாசா நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக பிரகடனபடுத்திய அவரை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் எங்கிருக்கிறார் என இதுவரை கண்டறிய முடியவில்லை.

சுவாமி நித்யானந்தா
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் முகம் காட்டாத நித்யானந்தா கடைசியாக முகம் காட்டிய மதுரை சித்திரை திருவிழாவின் போதுதான். அதன் பிறகு அவர் பக்தர்களுக்கு சத்சங்கம், ஆசி வழங்குவது உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் அவர் அவர் மரணமடைந்து விட்டதாகவும் பீதி கிளப்பி வந்தனர். அவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் பதிவு ஒன்று வந்தது.

இறந்து விட்டதாக வதந்தி
அதில்,"என் ஹேட்டர்கள் நான் இறந்துவிட்டதாக பரப்பும் வதந்திகளை நம்பவேண்டாம். சமாதியில் இருக்கிறேன், ஆனால் இறக்கவில்லை என்று என் சீடர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். உண்மையில் எனக்கு நோயெல்லாம் ஒன்றும் இல்லை. இது உடலின் வழியாகச் செயல்படும் ஒரு காஸ்மோஸ் போன்றது. மருத்துவர்களால் எந்த நோயையும், கோளாறுகளையும் இன்னும் என் உடலில் இருந்து கண்டறிய முடியவில்லை" என கூறியிருந்தார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
அந்த பதிவோடு நித்யானந்தா எழுதுவதுபோல கடிதத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இதன் மூலம் மரணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கைலாஷ் ஆவின் இணையதளத்தில் ஒரு முக்கிய தகவல் வெளியிடப்பட்டு மீண்டும் நித்யானந்தா திரும்பி வருவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில்," சுவாமிஜி சமாதி நிலைக்குச் சென்று திரும்பிவந்தபிறகு, பரமசிவன் கொடுத்த சக்திகளை மக்களுக்கு தீட்சையாக வழங்குவார். இப்பொழுது மட்டும் வதந்திகளை ஊடகங்கள் மூலமாகப் பரப்பி வருகின்றனர்.

ஆன்மீக வகுப்பு
இவர்கள் இந்த வதந்தியைப் பரப்ப இதுதான் காரணம் என்று எங்களால் ஒன்றை யூகிக்க முடிகிறது. சுவாமிஜி 21 நாள் ஆன்மிக வகுப்பு ஒன்றை ஆன் லைன் மூலமாக எடுக்கப்போகிறார், இந்த வகுப்பில் உலகம் முழுவதில் இருந்தும் பல பேர் ஆன்லைன் மூலமாகக் கலந்துகொள்ளப்போகிறார்கள். ஆக இந்த ஆன்மிகப் பயிற்சி வகுப்பைச் சீர்குலைக்கவே இது போன்ற வதந்தியைப் பரப்பி வருகின்றனர்" என கூறப்பட்டுள்ளது. அதாவது நித்தியானந்தா மீண்டும் சத்சங்கத்தில் ஈடுபடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம், பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.

பண நெருக்கடி
தொடர் வழக்குகள் தலைமறைவு வாழ்க்கை என கடந்த சில நாட்களாகவே நெருக்கடியில் இருக்கும் நித்யானந்தாவுக்கு பணத்தேவை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆன்லைன் மூலமும் யாரும் அவரது பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ள விண்ணப்பிக்காத நிலையில் பண நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது உண்மைதான் என்றாலும், தன் இருப்பைக் காட்டிக் கொள்ளவும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தவும் அவரே திட்டமிட்டு உடல்நலக் குறைவு போல புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏமாற்ற திட்டம்
சிவனை சந்திக்க சென்று விட்டதாகக் கூறி பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் தோன்றினால் ஆன்மீக வகுப்புக்கு அதிக பக்தர்கள் வருவார்கள் இதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என நித்யானந்தா தரப்பினர் திட்டமிட்டதாகவும், இதற்காகவே இதுபோல நாடகம் நடப்பதாக சிலர் கூறி வருகின்றனர். ஏற்கனவே பலமுறை நித்தியானந்தா சமாதி நிலைக்குச் சென்று திரும்பியதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் அவர் வந்துவிட்டார் சிவனை நேரில் சென்று சந்தித்து விட்டார் எனக் கூறி பக்தர்களிடம் பணம் பறிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.