• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நம்பர் 1".. ஸ்டாலின் "லவ் டுடே" பார்த்தால் இவருக்கென்னவாம்.. எப்ப பார்த்தாலும்.. அட மனுஷ்யபுத்திரன்

Google Oneindia Tamil News

சென்னை: இதுவரை எத்தனையோ குற்றச்சாட்டுகளை திமுக மீது அள்ளி வீசி வருகிறாரே அண்ணாமலை, அதில் ஏதாவது குற்றச்சாட்டு இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று மனுஷ்யபுத்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "லவ் டுடேன்'னு ஒரு படம் ரிலீஸானபோது உதயநிதி ஸ்டாலின் சொன்ன தகவல் இது...

'இந்த படமும் நாமதான் ரீலிஸான்னு அப்பா கேட்டாரு. ஆமாம்பான்னு சொன்னேன். அந்த படமும் நாமதான் ரிலீஸான்னு கேட்டார். ஆமாம்பான்னு சொன்னேன்.

EXCLUSIVE: திராவிட மாடல் என்றால் என்ன? அண்ணாமலை திராவிடரா? மனுஷ்யபுத்திரன் பரபரப்பு பேட்டி! EXCLUSIVE: திராவிட மாடல் என்றால் என்ன? அண்ணாமலை திராவிடரா? மனுஷ்யபுத்திரன் பரபரப்பு பேட்டி!

 நம்பர் ஒன்

நம்பர் ஒன்

'லவ் டுடே' படம் ரிலீஸாகி ஒரு வாரம்தான் ஆகுது. நீங்களும் அம்மாவும் பாருங்கப்பான்னு சொன்னேன். எங்க அப்பாவும் அம்மாவும் ஒன்றாக அமர்ந்து இந்தப் படத்தைப் பார்த்தாங்க'ன்னு உதயநிதி சொல்றார். தமிழ்நாட்டில் வரக்கூடிய அனைத்துப் படங்களையும், 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரன் போல புடுங்கிப் புடுங்கி அனைத்துப் படத்தையும் ரிலீஸ் செய்வதிலும் இவர்கள்தான் நம்பர் ஒன்.. சென்னையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல், கடைக்குப் போய் சாப்பிட முடியாமல், ஒரு டீ குடிக்கக் கூட முடியாமல் சுற்றிக் கொண்டிருக்கும் போது, நம்முடைய முதலமைச்சர் மட்டும் 3 மணி நேரம் 'லவ் டுடே' படத்தை நேரம் ஒதுக்கிப் பார்த்திருக்கிறார்.

 லவ் டுடே

லவ் டுடே

காதலிக்கக் கூடிய இரண்டு பேர் செல்போனை மாற்றிக் கொள்வதுதான் படத்தின் கதையாம். ரொம்ப அருமையான படம் எடுத்திருக்கிறாய் என்று உதயநிதியை ஸ்டாலின் பாராட்டினாராம். ஒரு சமூக மாற்றத்திற்கான படம். இதைப் பார்த்த உடனே தமிழகத்தில் சமூக நீதி வரப்போகிறது. தமிழகத்தில் ஆறு மாதிரி பால் பொங்கி ஓடப் போகிறது. மக்களுடைய வாழ்வாதாரம் உயரப் போகிறது என்பதைப் போல படம் எடுத்திருக்கிறார் உதயநிதி" என்றெல்லாம் அண்ணாமலை சீறியிருந்தார்..

 ரோபா மிஷின்

ரோபா மிஷின்

இந்நிலையில், மூத்த பத்திரிகையாளரும், திமுக ஐ.டி-விங் ஆலோசகரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவரிடம் இதுகுறித்து நாம் கேள்வி எழுப்பினோம்.. அதற்கு மனுஷ்யபுத்திரன் நம்மிடம் சொன்ன பதில்தான் இது: "முதல்வர் சினிமா பார்ப்பதை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.. ஒரு முதல்வர் என்ன வேலை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை அண்ணாமலை போன்று எந்த வேலையுமே செய்யாத ஆட்கள் முடிவு செய்யக்கூடாது.. முதல்வர் என்பவர் ரோபோ கிடையாது, மிஷின் கிடையாது..

 பங்களா ரெஸ்ட்

பங்களா ரெஸ்ட்

அப்படியே முதல்வர் சினிமா பார்த்தாலும், அதனால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னன்னு அண்ணாமலையை சொல்ல சொல்லுங்க.. இதெல்லாம் அவரவர் தனிமனித விருப்பங்கள்.. திடீர்னு வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்லலாம், ஓய்வும் எடுத்து கொள்ளலாம், இதெல்லாம் முதல்வர் விருப்பம்.. ஜெயலலிதா ஆட்சியில் இல்லாத காலகட்டத்தில், 5 வருஷத்தில் 4 வருடம் ஓய்வில்தான் இருப்பார்.. ஆட்சியில் இருக்கும்போது, வருடத்தில் 8 மாசம் கொடநாடு பங்களாவில் ஓய்வில்தான் இருப்பார்.. யாருமே அதை கேட்டதில்லையே..

 எப்ப பார்த்தாலும்

எப்ப பார்த்தாலும்

அதனால், முதல்வர் ஸ்டாலின் அடிப்படையில் கலைத்துறையை சேர்ந்தவர்.. கலைத்துறையை சாராதவராகவே இருக்கட்டுமே, ஒரு முதல்வருக்கு சினிமா பார்க்க உரிமை கிடையாதா? அண்ணாமலை என்ன 24 மணி நேரமும் போராளியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாரா? இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கே, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக, இவர் பேசாமல் போய் அந்த போலீஸ் ஆபீசர் வேலையை பார்க்கலாம் இல்ல? எதுக்கு எப்ப பார்த்தாலும் பேட்டி தந்துட்டே இருக்கார்? அதாவது திமுக அரசு மீது குறை சொல்ல ஒன்னுமே இல்லை..

 குட்டு குட்டு

குட்டு குட்டு

அவர்கள் சொல்லக்கூடிய விமர்சனங்களிலும் உடனுக்குடன் குட்டு வெளிப்பட்டு விடுகிறது.. இதுதான் அவங்களுக்கு பிரச்சனையே... அண்ணாமலை சொல்லக்கூடிய குற்றச்சாட்டுக்கு இதுவரைக்கும் ஏதாவது ஆதாரம் இருக்கா? அவர் சொன்ன எத்தனையோ குற்றச்சாட்டுகளுக்கு திமுக தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.. அப்படி விளக்கம் சொன்னபிறகும், திமுக தந்த விளக்கம் தவறு என்று என்னைக்காவது வந்து அவர் நிரூபித்திருக்கிறாரா? அண்ணாமலை என்பவர் வதந்தியை பரப்பும் ஒரு நபர்.. அவ்வளவுதான்" என்றார்.

English summary
No 1 DMK and IT wing cadre manushyaputhiran slams Tamil nadu BJP Leader Annamalai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X