வாடகைத்தாய்.. நயன்தாரா - விக்னேஷ் விசாரணையில் மெகா ட்விஸ்ட்.. இனி எதுவுமே பண்ண முடியாது? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள். இவர்களிடம் செய்யப்பட்டுள்ள விசாரணையில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளதாக விசாரணை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாடகை தாய் சட்டம் இந்தியாவில் மிகவும் கடுமையானது. இந்திய பெண்களை வாடகை தாயாக வெளிநாட்டினர் பயன்படுத்திக்கொள்வதை தடுக்கும் வகையிலும், சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வாடகை தாய்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையிலும் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

 No action can be taken against Nayanthara and Vignesh Shivan, If they married 6 years ago?

கடந்த டிசம்பரில் இந்த சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. வாடகை தாய் விவகாரம் என்பது இந்தியாவில் பல வருடமாக சர்ச்சையில் இருக்கும் விஷயம் ஆகும். இதை பற்றி குறிப்பாக கடந்த 20 வருடங்களாக தீவிர விவாதங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 2013லேயே ஒருபாலினத்தவர்கள் இந்த முறை மூலம் குழந்தை பெற இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. 2015ல் வெளிநாட்டினர் இந்தியாவில் வாடகை தாய் முறையில் குழந்தை பெற தடை விதிக்கப்பட்டது.

தற்போது இந்தியாவில் ஒரே ஒரு வகையான வாடகை தாய் முறைக்கு மட்டுமே அனுமதி உள்ளது. மொத்தம் இரண்டு வகையான வாடகை தாய் முறைகள் உள்ளன. முதல் முறை Surrogacy in the traditional sense அதாவது பாரம்பரிய வகை. இந்த வகை மூலம் தம்பதியில் ஆணின் விந்தணு எடுக்கப்பட்டு வாடகை தாய் செயற்கையான முறையில் கருவூட்டப்படுகிறார். இதற்கு இந்தியாவில் தடை உள்ளது.

இரண்டாவது முறை Gestational surrogacy எனப்படும் கர்ப்பகால வாடகைத் தாய். இதற்கு தான் இந்தியாவில் இன்னும் தடை விதிக்கப்படவில்லை. இந்த முறையில் ஆணின் விந்தணு, அவரின் மனைவியின் கரு முட்டை சேர்ந்து கருவாக உருவாக்கப்படும். பின்னர் அந்த கரு வாடகை தாயின் வயிற்றில் சேர்க்கப்படும்.

 No action can be taken against Nayanthara and Vignesh Shivan, If they married 6 years ago?

இதற்கு தடை கிடையாது. ஆனால் இதற்கு சில விதிமுறைகள் உள்ளன. கருவுற முடியாத பெண்கள், தம்பதிகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்க முடியாது என்றால் மட்டும் இதில் குழந்தை பெற்றுக்கொள்ள இப்போதும் இந்தியாவில் அனுமதி உண்டு.

இந்த நிலையில்தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றுக்கொண்டது சட்டப்படிதானா என்று கேள்விகள் எழுந்தன? மொத்தம் 3 கேள்விகள் இதில் எழுந்தன?

1. தம்பதிகளில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கலா?

2. இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிவிட்டதா?

3. ஒருவேளை இந்தியாவில் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் வெளிநாட்டில் பெற்றுக்கொண்டனரா?

இந்த 3 கேள்விகள் உச்சத்தில் இருந்த நிலையில்தான் சுகாதாரத்துறை இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தது.

 No action can be taken against Nayanthara and Vignesh Shivan, If they married 6 years ago?

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் 6 வருடங்களுக்கு முன்பே பதிவுத்திருமணம் செய்து கொண்டதாக விசாரணையில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஆவணங்களை அவர்கள் விசாரணையில் சமர்ப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திருப்பம் காரணமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால்,

1. அவர்கள் பழைய சட்டம் அமலில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆகி 6 வருடம் ஆகிவிட்டது.

2. 6 வருடம் ஆகிவிட்டதால் இவர்கள் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது தவறு கிடையாது.

3. இவர்கள் வெளிநாடு சென்று குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

இவர்கள் 6 வருடத்திற்கு முன்பே சட்டப்படி பதிவுத்திருமணம் செய்து கொண்டதால், இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+