”திமுக ஆட்சியில் உருப்படியான திட்டம் எதுவும் இல்லை” காலை சிற்றுண்டி திட்டம் குறித்து ஜெயக்குமார்!
சென்னை: திமுக ஆட்சியில் திட்டத்திற்கு பெயர் வைக்கும் பணிகள் மட்டுமே நடப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாதுரையின்114-வது பிறந்தநாள் விழாவையொட்டி இன்று வாலாஜா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பாமர மக்களும் ரசியலில் நிர்வாகத்திற்கு வர முடியும் என்று அனைவருக்கும் நிரூபித்து காட்டியவர். அரசியலில் சகிப்புத்தன்மை வேண்டும் என்று அண்ணா கூறினார். ஆனால் அதற்கு மாறாக எதிர்க்கட்சிகளை ஒடுக்க வேண்டும் என்ற நாகரீகமற்ற அரசியல் திமுக எடுத்து செல்கிறது.

உருப்படியாக திட்டம் கிடையாது
அண்ணாவின் வழியில் வந்தோம் என்று சொல்வதற்கு திமுகவுக்கு அருகதை கிடையாது. திமுக ஆட்சியில் உருப்படியான திட்டம் கிடையாது. ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால், அதற்கு பெயர் சூட்டும் விழாவை திமுக பிரமாதமாக நடத்தும். அதற்கு காரணம் தலைமைச் செயலாளர் இறையன்பு. அவர் எழுதிக் கொடுப்பதை தான் முதலமைச்சர் படித்து வருகிறார்.

வாக்குறுதிகள் என்ன ஆனது?
காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முழுமையாக சாப்பிடாமல் கைகளை கழுவினார். அவர்கள் திட்டத்திற்கு பெயர் வைக்கும் வேலையை மட்டும் செய்கிறார்களே தவிர, ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் வழங்கிய மகளிருக்கான உரிமைத் தொகை, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட வாக்குறுதிகள் என்ன ஆனது. இதுநாள் வரை நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற முடியவில்லை என்று விமர்சித்தார்.

சசிகலா பற்றி கருத்து
தொடர்ந்து, பண்ருட்டி ராமச்சந்திரனை யார் வேண்டுமானாலும் சென்று சந்திக்கலாம். அதனால் என்ன நடக்கிறது என்பது தான் முக்கியம். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கட்டுப்பாட்டில் கம்பீரமாக செயல்படுகிறது. சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவாக தன்னை பார்ப்பதாக சசிகலா பேசுவது மலைக்கும், மடுவுக்கான வித்தியாசம் என்று குற்றம்சாட்டினார்.

விளம்பரப் பிரியர்கள்
மேலும், திமுக அரசில் இருவர் விளம்பரத்தில் கெட்டிக்காரர்கள். ஒருவர் முதல்வர் ஸ்டாலின், இன்னொருவர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். மருத்துவத்துறையில் ஏராளமான பிரச்னைகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications