அடுத்த 6 மாதங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் கிடையாது! BDO-க்கள்தான் ராஜா! தவெக அரசு புதிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 6 மாதங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், அதிகாரிகளை கொண்டு பணிகளை முடிக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு திட்டமிட்டிருக்கிறது.

புதிதாக உருவாக்கப்பட்ட 93 கிராம ஊராட்சிகள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றியங்களை தவிர்த்து, மற்ற அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அக்டோபர் 20ஆம் தேதி முதல், 2027ம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி வரை 6 மாத காலத்திற்கு அதிகாரங்களை பயன்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

elections tamil nadu TVK vijay

பிடிஓ-க்கள்தான் இனி ராஜா?

இந்த அரசாணைப்படி, 37 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம ஊராட்சியை பொருத்தவரை, அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) சிறப்பு அதிகாரியாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஊராட்சி ஒன்றியத்தை பொறுத்தவரை, அந்தந்த மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் உதவி இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் (தணிக்கை) ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஊராட்சியை பொருத்தவரையில், மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமைகளின் கூடுதல் இயக்குனர், கூடுதல் ஆட்சியர், இணை இயக்குனர், திட்ட இயக்குனர் ஆகியோர் மாவட்ட ஊராட்சியின் சிறப்பு அதிகாரிகளாக பொறுப்பேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் நடத்த முடியாத சூழல்

தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலை அக்டோபர் 19ஆம் தேதிக்குள் நடத்த முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது என அரசு காரணங்களை பட்டியலிட்டிருக்கிறது.

அதாவது, 46 ஊரக உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால்.. எல்லைகளை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிதாக 9 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 93 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டு, ஒரு கிராம ஊராட்சி ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

காரணத்தை லிஸ்ட் போட்ட அரசு

மேற்கண்ட மாற்றங்கள் காரணமாக, 23 மாவட்டங்களில் வார்டுகளை மறுவரையறை செய்யும் பணிகள் மற்றும் இட ஒதுக்கீடு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் உத்தரவின்படி.. வார்டு வரையறை மற்றும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு முறையான காலக்கெடுவுக்குள் முழுமையாக முடிவடைந்த பின்னரே.. தேர்தலில் நடத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பதவிக்காலம் நீட்டிப்பு

எனவே சட்டமன்ற கூட்டத்தொடர் இல்லாத இந்த சமயத்தில், உள்ளாட்சி அமைப்புகளை.. நிர்வாகம் தொய்வின்றி நடக்கவும், கிராம அளவில் மின்விளக்கு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பணிகள் தடை இன்றி தொடரவும், அவசர சட்ட திருத்தம் மூலம் இந்த சிறப்பு அதிகாரிகள் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 19 வரை நீடிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தனி அலுவலர்களின் நியமனம்

இந்த உத்தரவு மூலம் அடுத்த 6 மாதத்திற்கு இனி BDO தான் ராஜா என்று விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. உள்ளாட்சித் தேர்தலின் காலகட்டத்தை பொறுத்தவரை? முதல் கட்டமாக 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம்.. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி அன்றே முடிந்த முடிவடைந்து விட்டது. அதனைத் தொடர்ந்து தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

இரண்டாம் கட்டமாக.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் பதவிக்காலம் இந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் புதிதாக தேர்தல் நடத்த முடியல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+