தினம் ரூ.2,200 சம்பாதிப்பவர் ஏழையா? பொருளாதார இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது- ஸ்டாலின் ஆவேசம்
சென்னை: ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மேற்பட்டோர் வருமான வரி செலுத்தும் நிலையில் 8 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சமூக, கல்வி ரீதியாக மட்டுமே இட ஒதுக்கீடு மட்டுமே தேவை என்றும் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது தேவையில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10 சதவீத இடஒதுக்கீடு விஷயத்தில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பாகவும் 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக சார்பில் பொன்முடி, வில்சன், மதிமுக சார்பில் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல். திருமாவளவன், ரவிக்குமார், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை பங்கேற்றுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், கொங்கு மண்டல தேசிய கட்சி சார்பில் சின்ராஜ், மனித மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா பங்கேற்றுள்ளனர். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, சின்னத்துரை, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாலு, வெங்கடேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் ஆகியோர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர்.
உயர்ஜாதி இடஒதுக்கீடு.. ஸ்டாலின் தலைமையில் கூடியது அனைத்து கட்சி கூட்டம்! அதிமுக “ஆப்சென்ட்”'

அடுத்த கட்ட நடவடிக்கை
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி ஆலோசனை நடைபெற்றது. 10 சதவீத ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு தொடர்பாக மேற்கோள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முதல்வர் ஆலோசித்து வருகிறார்.

10% இட ஒதுக்கீடு
முன்னேறிய வகுப்பினருக்கு மட்டுமே இந்த 10% இட ஒதுக்கீடு பொருந்தும். அதாவது மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த 10% இட ஒதுக்கீடு கிடைக்காது. முன்னேறிய வகுப்பில் இருக்கும் ஏழைகளுக்கு மட்டுமே இந்த 10% இட ஒதுக்கீடு கிடைக்கும். இதற்கு அவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். ஐந்து ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட விவசாய நிலத்தை வைத்திருக்கக் கூடாது. 1000 சதுர அடி அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு பொருந்தாது. இதுபோன்ற சில விதிமுறைகள் உள்ளன.

மிகப்பெரிய ஆபத்து
இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூக நீதி கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. மிக மிக அடிப்படையிலான கொள்கையை நிலைநாட்டவே இந்த அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டால் தகுதி போனது, திறமை போனது என சொல்லி வந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறுவதற்கு பயன்படும் தத்துவம்தான் சமூக நீதி கொள்கை என்றார்.

10% இட ஒதுக்கீடு தேவையில்லை
பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை; சமூக, கல்வி ரீதியாக இடஒதுக்கீடு வழங்குவதுதான் சரியானது. பொருளாதாரரீதியான இடஒதுக்கீடு செல்லாது என்று ஏற்கனவே தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் நாங்கள் தடுக்க மாட்டோம். முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கு உதவுவதை தடுப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். சாதி பேதம் இன்றி ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகிறது.

யார் ஏழைகள்?
5 ஏக்கருக்கு குறைவாக வைத்திருப்பவர்கள் ஏழைகளா? என்று கேள்வி எழுப்பிய முதல்வர், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமான வரி செலுத்தும் நிலையில் ரூ.8 லட்சம் பெறுவோர் ஏழைகள் என சொல்வதை ஏற்க முடியுமா? என கூறினார்.

சமூக நீதிக்கு முரண்
தினமும் ரூ.2,200 சம்பாதிப்பவர்களை ஏழைகள் என ஒன்றிய அரசு சொல்வதை எப்படி ஏற்பது? என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் பொருளாதார இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு முரணானது; அரசியலமைப்பு சட்டத்துக்கும் முரணானது எனவும் குறிப்பிட்டார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications