சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு- அரையாண்டு தேர்வு இல்லை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 10, 11 , 12 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் தொடங்கியது. இதையடுத்து அப்போது முதல் தமிழகம் உள்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட்டு ஊரடங்கு அமலானது.

 தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை - ஆயுதபூஜை நாளில் கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை - ஆயுதபூஜை நாளில் கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு

கொரோனா பரவல் 1 மற்றும் 2 ஆம் அலை பரவிய நிலையில் அது குறைந்ததும் மெல்ல மெல்ல ஊரடங்கு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டது. அது போல் கொரோன பாதிப்பிற்கேற்ப அந்தந்த மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு முடிவு செய்து கொள்ளுமாறு மத்திய அரசு தெரிவித்தது.

பள்ளி திறப்பு

பள்ளி திறப்பு

சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை கடந்த ஆட்சியில் திறக்கப்பட்டு பின்னர் இரண்டாவது அலை உச்சமடைந்த நிலையில் திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. 2-ஆவது அலை பரவல் குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

நவ. 1 முதல் பள்ளிகள் திறப்பு

நவ. 1 முதல் பள்ளிகள் திறப்பு

இந்த நிலையில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1 முதல் 5 ஆம் வகுப்புகள் வரை பின்னர் பள்ளிகளை திறக்கலாம் என பலர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழக அரசோ நவம்பர் 1 ஆம் தேதி மேற்கண்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது.

அரையாண்டு

அரையாண்டு


இந்த நிலையில் இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது.

பொதுத் தேர்வு

பொதுத் தேர்வு

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத் தேர்வை அவர்கள் சந்திப்பார்கள். இந்த பொதுத் தேர்வுக்கு முன் மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் டிசம்பர் மாதம் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.

English summary
Minister Anbil Mahesh says that there will no quartely and Half yearly exam for 10, 11, 12th students for this academic year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X