"அனல் பறக்கும் களம்.. ஆளை காணோம் விஜய்!" டூப் முதல் ஹாலோகிராம் வரை.. தவெகவின் 'சமாளிப்பு' அரசியல்!
தஞ்சாவூர்: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் 100 டிகிரி வெயிலையும் தாண்டி அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என விஜய் அறிவித்தபோது, தமிழக அரசியலில் ஒரு பெரிய வெடி வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் நெருங்கும் வேளையில் தவெக வேட்பாளர்கள் ஒருபுறம் திணற, மறுபுறம் 'தலைவர் எங்கே?' என்கிற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதைச் சமாளிக்க தவெக வேட்பாளர்கள் புதுப்புது டெக்னிக்கை கையில் எடுத்து வருகிறார்கள்.
தமிழகத்தின் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், மூலை முடுக்கெல்லாம் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான், டிடிவி தினகரன் என சீனியர் தலைவர்கள் முதல் ஜூனியர் தலைவர்கள் வரை வெயிலில் வேர்க்க விறுவிறுக்க வாக்கு சேகரித்து வருகிறார்கள். ஆனால், 'மாற்றம்' கொண்டு வருவேன் எனத் தேர்தல் களத்தில் குதித்த விஜய்யின் பிரசார வேன் நகரவே மறுக்கிறது.

நெட்டிசன்கள்
"எல்லாத் தலைவர்களும் ரோட்டில் இறங்கிப் பேசும்போது, விஜய் மட்டும் ஏன் வரவில்லை?" என நெட்டிசன்கள் வரிசையாகக் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது விஜய்யைப் பார்க்கலாம் என ஆவலாகக் காத்திருந்த பொதுமக்களிடையே மட்டுமன்றி, சொந்தக் கட்சி வேட்பாளர்களிடையே கூட ஒருவித சோர்வை ஏற்படுத்தியுள்ளது. "உங்க தலைவர் எப்போ வருவார்?" என மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் வேட்பாளர்கள் திணறி வருகின்றனர். இதனால், வாக்காளர்களைக் கவர தவெக வேட்பாளர்கள் புது புது ஐடியாக்களை கையில் எடுத்துள்ளனர்.
பொம்மை
அப்படி தான் கடந்த வாரம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் திமுக அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிராக தவெக சார்பில் என்.எஸ். விஜி போட்டியிடுகிறார். திமுக அமைச்சர் போட்டியிடும் தொகுதி வலுவான தொகுதி.. இங்கு விஜய் பிரச்சாரத்திற்கு வருவார் என பார்த்தால் விஜய் பொம்மை தான் பிரச்சாரத்திற்கு வந்துள்ளது. ஆம், நிஜமாகவே தவெக வேட்பாளர் விஜி, அவர்கள் தலைவர் விஜய்யின் பொம்மை வேனில் ஏற்றி தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார்.
டூப்
அதேபோல அதிமுகவில் சீட் கிடைக்காததால் விலகி தவெகவில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் வி.எஸ்.பாபு, விஜய் போலத் தோற்றமளிக்கும் டூப் நடிகரை தன்னோடு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பிரச்சாரம் செய்தார். ரியல் விஜய் லீவ் எடுக்க.. ரீல் விஜய் உடன் பிரச்சாரம் என நெட்டிசன்கள் நக்கலடித்தனர். இயக்குநர் சேரன் கூட இது தொடர்பாகத் தனது ட்விட்டரில் இதை விமர்சித்திருந்தார். இன்னும் சிலர் பிரசார வேன்களின் மேல் விஜய்யின் கட்-அவுட்களை வைத்துச் சமாளித்து வருகின்றனர்.
தொழில்நுட்பம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதி வேட்பாளர் வினோத், டெக்னாலஜியில் ஒரு படி மேலே போய்விட்டார். விஜய் நேரில் வராத குறையைப் போக்க, 'ஹாலோகிராம்' (Hologram) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்து வந்தார். பிரசார வாகனத்தில், விஜய் நேரில் நின்று பேசுவது போன்ற தத்ரூபமான 3D பிம்பத்தை உருவாக்கி, அவர் மூலமாகப் பிரசாரம் செய்தார். இதைப் பார்க்கும் மக்கள், "என்னப்பா இது... விஜய் நிஜமாகவே இங்கதான் இருக்கிறாரா?" என ஒரு நொடி ஸ்டன் ஆகிறார்கள். ஆனால், அடுத்த நொடியே பொம்மை எனத் தெரிந்தவுடன் சிரித்துவிடுகிறார்கள்.
அதிருப்தி
விஜய் 234 தொகுதிகளுக்கும் குறுகிய காலத்தில் பிரச்சாரம் செய்வது கடினம் தான் என்றாலும் குறைந்தபட்சம் முக்கிய தொகுதிகளுக்குப் பிரச்சாரம் செய்யலாம். "ஸ்கிரீனில் விஜய் வருவதைப் பார்த்து விசில் அடிக்கலாம்... ஆனால், தேர்தலில் ஓட்டுப் போட மக்கள் விஜய்யை நேரில் எதிர்பார்க்கிறார்கள். மூத்த தலைவர்களே ஓய்வில்லாமல் பிரச்சாரம் செய்யும் நிலையில், மாற்றத்தைத் தருவேன் எனச் சொல்லிவிட்டு ஒரு நாள் பிரச்சாரம் மறுநாள் லீவ் என விஜய் இருப்பது சரியில்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்!
-
வருமான வரியை மறைத்ததாக வழக்கு!ரூ 1.50 கோடி அபராதத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போன விஜய் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
"விஜய்க்கு உடல்நல பிரச்சனை? ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை" என தகவல்! அதான் பிரச்சாரம் ரத்தாம்! -
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெல்வாரா? வெறும் 20 பேர்தானாமே! குஷியில் இனிகோ இருதயராஜ்! -
ஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்தது விஜய்யா? சென்சாரா? புது பாயிண்ட் சொல்லும் எஸ்.வி.சேகர் -
குடும்பத்தை பார்க்காதவர் எப்படி மக்களை பார்ப்பார்..சுத்து போட்ட மக்கள்..தெறித்து ஓடிய தவெக வேட்பாளர் -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
கன்னியாகுமரியில் இன்று விஜய் அதிரடி! மதியம் 2 மணிக்கு தொடங்கும் மெகா பிரசாரம்.. ரூட் மேப் இதோ -
"மிஸ்ராவை மிஸ் பண்ணிடாதீங்க"! வீல்சேரில் வந்த பொன்னம்பலமா இது! தவெகவுக்கு பிரச்சாரம் செய்றாரே! -
இனிகோவுக்கு WFH தெரியாது.. உங்க வீட்டுக்கே வருவாரு.. விஜய் தொகுதியில் இறங்கி அடித்த உதயநிதி -
ஜனநாயகன் படம் லீக்கான விவகாரம்.. சிபிஎப்சிதான் காரணமா? தணிக்கை வாரியம் பரபர விளக்கம் -
10 நாள்தான் டைம்! வீடு வீடாக போய் ஓட்டு கேளுங்க! நீலாங்கரை வீட்டுக்குள் இருந்தபடியே விஜய் அறிவுரை -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார்













Click it and Unblock the Notifications