தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கும் - இயல்பான அளவு மழை பெய்யும்
தென்மேற்கு பருவமழை விலகிய பிறகே, வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை விலகிய பிறகே, வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3 வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்த ஆண்டு இயல்பான அளவு அல்லது இயல்பை ஒட்டிய அளவில் மழை இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஜூன் முதல் அக்டோபர் வரை தென்மேற்குப் பருவமழைக்காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை
வடகிழக்குப் பருவமழைக்காலமாகும். ஜூன் மாதத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன், ராஜஸ்தானில் தென்மேற்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அதை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தென் இந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை விலக 10 நாட்களுக்கு மேல் ஆகும் என்றார்.
தென்மேற்கு பருவமழை விலகிய பிறகே, வடகிழக்கு பருவமழை தொடங்கும். அந்த வகையில் தமிழகம் அதிக மழையை பெறக்கூடிய வடகிழக்கு பருவமழை காலம் வழக்கமாக தொடங்கக்கூடிய அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு அல்லது இயல்பை ஒட்டிய அளவில் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
தென்மேற்கு பருவமழை விலகிய பிறகே, வடகிழக்கு பருவமழை தொடங்கும். அந்த வகையில் தமிழகம் அதிக மழையை பெறக்கூடிய வடகிழக்கு பருவமழை காலம் வழக்கமாக தொடங்கக்கூடிய அக்டோபர் 3 வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு அல்லது இயல்பை ஒட்டிய அளவில் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

அரசு தீவிர கண்காணிப்பு
கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் பெய்த பெருமழையால் சென்னையில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. லட்சக்கணக்கானோர் சிரமத்திற்கு ஆளாகினர். ஒவ்வொரு ஆண்டிலும் சென்னையில் மழை காலங்களில் நீர் தேங்கிக் கிடப்பதும், வாகனப் போக்குவரத்தில் பாதிப்பது ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒக்கி புயல், வர்தா புயல், கஜா புயல், போன்றவை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தின. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்புகளில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர்நிலைகள், நீர்வழித் தடங்கள், ஆறுகள் போன்றவற்றில் தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதுபோல் இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு அரசு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் 47 சதவிகிதம் மழை கிடைக்கிறது. இதில் ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகாமல் சேமிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications