அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பிஆர் சுந்தரை கைது செய்வதா? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழிலதிபரும், பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகருமான பி.ஆர் சுந்தர், தனியார் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பிஆர் சுந்தர் மீதான கைது நடவடிக்கையை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார்.

பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

PR Sundar

வேலை தொடர்பாக ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி பாலியல் தொல்லை அளித்ததுடன், அலுவலகத்தில் மூன்று மணி நேரம் அடைத்து வைத்து மிரட்டியதாக புகாரில் பெண் செய்தி வாசிப்பாளர் குற்றம்சாட்டி இருந்தார். இந்த வழக்கில், பி.ஆர். சுந்தருக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி அவரது மனைவி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், பெங்களூரில் இருந்த பி. ஆர் சுந்தர் மற்றும் அவருடைய மனைவி மங்கையர்கரசியை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், , அரசியல் பழிவாங்கல் நோக்கோடு பிஆர் சுந்தர் மீது வழக்குத் தொடுத்து, கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல்பாடு மிக மோசமான நடவடிக்கை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார்.

சீமான் வெளியிட்டுள்ள பதிவில், "அரசியல் பழிவாங்கும் நோக்கோடு சகோதரர் பி.ஆர்.சுந்தரைக் கைது செய்வதா? ஆட்சி நிர்வாகத்தை விமர்சித்ததற்காக பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் சகோதரர் பி.ஆர்.சுந்தர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, அரசியல் பழிவாங்கல் நோக்கோடு வழக்குத் தொடுத்து, கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல்பாடு மிக மோசமான நிர்வாக நடவடிக்கையாகும்.

தனிநபர் பகை தீர்க்க, மக்களுக்காக இயங்க வேண்டிய அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும். முதல்வர் விஜய்யின் போக்கு வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.

அரசையோ, அரசியல் இயக்கத்தையோ விமர்சித்துப் பேசுவதற்கு அரசியலமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை என்பது மிக மிக அடிப்படையான சனநாயக உரிமையாகும். அந்த அடிப்படை உரிமையையே முற்றாக மறுக்கும் வகையில், அதிகாரத்தைக் கொண்டு வழக்குகளைத் தொடுத்து அச்சுறுத்துவதும், மிரட்டுவதுமான அதிகார முறைகேட்டினை கடுமையாக எதிர்க்கிறேன்.

ஆகவே, சகோதார் பி.ஆர்.சுந்தர் மீது உண்மைக்குப் புறம்பாகத் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெசு அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+