சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இடைத்தேர்தல் கோதாவில் இறங்கிய ஓபிஎஸ்.. நான் தான் ஒருங்கிணைப்பாளர்.. ‘இரட்டை இலை’ எங்களுக்கே - பரபர!

Google Oneindia Tamil News

சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம் என ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அளிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக, பாமக, த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவோம் என்றும், பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிப்போம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஓ.பி.எஸ் ஈபிஎஸ் என இரு அணிகளாகப் பிரிந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை அவர் வெளியிட்டுள்ளார்.

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..அனலடிக்கும் களம்..அதிமுக - பாஜக பேச்சு..களமிறங்கும் ஓபிஎஸ் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..அனலடிக்கும் களம்..அதிமுக - பாஜக பேச்சு..களமிறங்கும் ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 4ஆம் தேதி மரணமடைந்தார். இதையொட்டி இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக கூட்டணியில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர் தரப்பில் அதிமுகவே களமிறங்க முடிவு செய்துள்ளது. தமாகா தலைவர் ஜிகே வாசன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடும் என நேற்று அறிவித்தார்.

ஓபிஎஸ் அறிவிப்பு

ஓபிஎஸ் அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி அணியின் மூத்த நிர்வாகிகள் இன்று பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து பேசுகின்றனர். இந்நிலையில், இடைத்தேர்தல் பற்றி தீவிரமாக ஆலோசித்து வந்த ஓ.பன்னீர்செல்வம், தாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அறிவித்துள்ளார். ஈபிஎஸ் அணி இடைத்தேர்தலில் களமிறங்கும் நிலையில், ஓபிஎஸ் அணியும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடைத்தேர்தலில் போட்டி

இடைத்தேர்தலில் போட்டி

ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னத்தை பெற எங்களுக்கு முழு உரிமை உள்ளது. 2026 வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன். சட்டவிரோதமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.

பாஜக விரும்பினால் ஆதரவு

பாஜக விரும்பினால் ஆதரவு

இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு என்றைக்கும் பன்னீர்செல்வம் காரணமாக இருக்க மாட்டான். பிரிந்து கிடக்கும் அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். கூட்டணி கட்சிகள் எங்களிடம் தொடர்ந்து பேசி வருகின்றன. பாஜக, பாமக, த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவோம். பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்தால் ஆதரவளிப்போம்." என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

மேலும், "ஈபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார். ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இதுவரை ஈபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்" என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

English summary
O. Panneerselvam has announced that their team is going to contest on behalf of AIADMK in the Erode East constituency by-election. OPS also said that they will compete in the double leaf symbol.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X