மாண்புமிகு எதிர்கட்சி துணை தலைவரே! ஓபிஎஸ்ஸை அன்புடன் அழைத்த அப்பாவு! ஓபிஎஸ் கேட்டாரு பாருங்க கேள்வி!
சென்னை : தமிழக சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணித்து எடப்பாடி பழனிச்சாமி அணி எம் எல் ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கூட்டத் தொடரில் பங்கேற்ற ஓ பன்னீர்செல்வத்தை மாண்புமிகு எதிர்க்கட்சி துணைத் தலைவர் என அப்பாவு அழைத்தார். இதை தொடர்ந்து பேசிய ஓ பன்னீர்செல்வம் தமிழகத்தில் கோசாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று கூடிய போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதோடு தங்களது எதிர்ப்புகளை கடுமையாக பதிவு செய்தனர்.
இந்தி எதிர்ப்பு தீர்மானம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையங்களின் அறிக்கையை தாக்கல் செய்யப்பட்ட பிறகு பேசலாம் என சபாநாயகர் அப்பாவு கூறியதை ஏற்காமல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்எல்ஏக்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர்.

எடப்பாடி அணி
மத்திய அரசுக்கு ஆதரவாக இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்திற்கு எதிராக செயல்படத் திட்டமிட்டுள்ளதாகவும் இரண்டு அறிக்கைகளுக்கு பயந்து 1989இல் நடந்தது போல மீண்டும் நடத்த திட்டமிட்டுள்ளீர்கள் என கடுமையாக பேசிய சபாநாயகர் அப்பாவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்எல்ஏக்களை இரண்டு நாள் சஸ்பெண்ட் செய்தும் அவையிலிருந்து வெளியேற்றவும் உத்தரவிட்டார். பிறகு சஸ்பெண்ட் நடவடிக்கை ஒரு நாளாக குறைக்கப்பட்டது.

எதிர்கட்சி துணைத் தலைவர்
இந்நிலையில் எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக இன்றும் கூட்டத் தொடரை புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி அணி சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து வள்ளுவர் கோட்டத்தில் போரட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதற்கு அனுமதியில்லை எனக் கூறி அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் 3வது நாளாக எடப்பாடி தரப்பினர் சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை.

ஓபிஎஸ்
அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியை சேர்ந்த உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். காலையில் கேள்வி நேரம் தொடங்கியது பல்வேறு துறைகள் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர். அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர். ஓபிஎஸ்ஸை தவிர சபை நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்த ஐயப்பன் தனது தொகுதி கோரிக்கை ஒன்றை வைக்க அதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

கோசாலை வேண்டும்
தொடர்ந்து அவையில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை 'மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்' என சபாநாயகர் அப்பாவு அழைக்க எழுந்து நின்று பேசிய ஓ.பன்னீர்செல்வம்," மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே.. தமிழகத்தில் ஆதரவற்ற கால்நடைகளுக்கு பாதுகாப்பளிக்க அரசு சார்பில் கோசாலைகள் அமைக்கப்படுமா ? அரசின் பரிசீலனையில் உள்ளதா?" என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த தமிழக கால்நடைத்துறை அமைச்சர்," ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கோசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது தேவைப்படும் இடங்களில் கால்நடை துறையின் மூலம் கோசாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications