போனில் கிடைத்த டெல்லி சிக்னல்.. நோ டென்ஷன்.. ‘தோற்றாலும்’ - ஓபிஎஸ் உற்சாகத்துக்கு பின்னணி இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஐகோர்ட் தீர்ப்பால் பின்னடைவைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு, டெல்லியின் ஆதரவு உறுதி எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதால் மிகுந்த நம்பிக்கையோடு இருந்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று அப்பீல் செய்த ஓ.பன்னீர்செல்வம், டெல்லியின் ஆதரவை எதிர்பார்த்து வருகிறார்.

இதற்கிடையே, எடப்பாடி தரப்பினரின் சில மூவ்களால் ஓபிஎஸ் ஷாக் ஆகியிருந்தாலும் கூட, டெல்லியில் இருந்து கிடைத்த பதிலால் மீண்டும் நம்பிக்கையோடு இருக்கிறாராம்.

தீர்ப்பின் சில பாயிண்டுகள் முரண்பட்டு இருப்பதால், வழக்கு நமக்கு சாதகம் தான் என சட்ட வல்லுநர்களும் உறுதியாகத் தெரிவித்திருப்பதால் வழக்கில் 'தோற்றாலும்' அசராமல் நிற்கிறாராம் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் அப்பீல்

ஓபிஎஸ் அப்பீல்

அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வெற்றியைக் கொடுத்த நிலையில், அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார் ஓபிஎஸ். இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், ஓபிஎஸ் தரப்பு இன்னும் அவசர விசாரணை கோரவில்லை என்பதால், எப்போது விசாரணைக்கு வரும் என்பது தெரியாத நிலை உள்ளது.

 பன்னீர் ஆலோசனை

பன்னீர் ஆலோசனை

ஐகோர்ட் தீர்ப்பு வந்தபோது தேனி பெரியகுளத்தில் இருந்த ஓபிஎஸ், உடனடியாக, காரில் சென்னைக்கு கிளம்பினார். தேனியில் இருந்து கிளம்பும்போதே, இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என அறிவித்தார். சென்னை வந்ததுமே முதல் வேலையாக தனக்கு நெருக்கமான முக்கிய நிர்வாகிகளையும் சட்ட வல்லுநர்களையும் சந்தித்து, இந்த தீர்ப்பு பற்றி ஆலோசனை மேற்கொண்டார் ஓபிஎஸ்.

போனில் டெல்லி மெசேஜ்

போனில் டெல்லி மெசேஜ்

முன்னதாக, காரில் சென்னை வந்துகொண்டிருந்தபோதே, டெல்லியில் சில முக்கிய புள்ளிகளிடம் பேச முயன்றுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். பின்னர், ஓபிஎஸ் சென்னை சென்ற பிறகு, டெல்லியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. ஐகோர்ட் தீர்ப்பு பற்றிப் பேசிய டெல்லி புள்ளி, நாங்களும் பார்த்தோம், அப்பீல் செய்யுங்கள், சிறந்த வழக்கறிஞர்களை இறக்கிவிடலாம், உச்ச நீதிமன்றத்தில் உங்கள் பக்கம் ஜெயிக்கும் என நம்பிக்கை வார்த்தைகளைக் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

டீப்பா இறங்குங்க

டீப்பா இறங்குங்க

இதனால் உற்சாகமடைந்த ஓபிஎஸ், தொடர்ந்து தீர்ப்பின் விவரங்கள் பற்றி சட்ட வல்லுநர்களின் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார். இன்றே அப்பீல் செய்வோம் என சிலர் கூறியதற்கும் கூட, முழுமையாக தீர்ப்பை ஆராய்ந்து, பாயிண்டுகளை எடுங்கள், இதில் நாம் ஜெயித்தே ஆகவேண்டியது கட்டாயம், சின்ன ஓட்டை கூட விடக்கூடாது என ஓபிஎஸ் அறிவுறுத்தினாராம்.

சிக்கல் + சிக்னல்

சிக்கல் + சிக்னல்

அதன்படியே, சட்ட வல்லுநர்கள் 3 நாட்களாக தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு, விரிவான தகவல்களோடு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். தீர்ப்பில் இருந்த சிக்கல்கள் மட்டுமல்லாது, டெல்லியில் இருந்து வந்த சிக்னலும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகுந்த நம்பிக்கை அளித்துள்ளதால், தனது ஆதரவாளர்களிடமும் உற்சாகமாகப் பேசி வருகிறாராம் ஓபிஎஸ்.

தீர்ந்த குழப்பம்

தீர்ந்த குழப்பம்

ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி தரப்பின் 2 முக்கிய புள்ளிகள் டெல்லியில் முகாமிட்டு சில காய்நகர்த்தல்களைச் செய்ததால், வேலுமணி வழக்கில் மத்திய அரசின் வழக்கறிஞரே இறங்கினார். இது ஓபிஎஸ்ஸுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், டெல்லி தனக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்திருப்பதால், நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறாராம். இதுதான் வழக்கில் பின்னடைவைச் சந்தித்தாலும், ஓபிஎஸ் சோர்வில்லாமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கக் காரணம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+