ஷாக்..களத்துல சந்திப்போம்! எடப்பாடிக்கு சிக்கல் கொடுக்கும் ஓபிஎஸ்! இந்த பிளான் லிஸ்ட்லயே இல்லையே?
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வாதங்களை முன் வைத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் என அவர் கூறியிருப்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்திற்கு தற்போது வரை முடிவில்லை. சொல்லப்போனால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் வரையே இந்த விவகாரம் தொடர்ந்து இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுகவினர்.
மே மாதம் ஓபிஎஸ் இபிஎஸ் ஒன்றாக இருந்த நிலையில் அதற்கு பிறகாக அடுத்தடுத்த மாதங்களில் அவர்களுக்கு இடையேயான விரிசல் அதிகரித்துக் கொண்டே சென்றது.

அதிமுக விவகாரம்
தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவுக்கு முன்னதாகவே இருவருக்கும் இடையேயான மோதலானது வெட்ட வெளிச்சமான நிலையில் அதற்கு அடுத்ததாக நடைபெற்ற பொதுக்குழுவில் எப்போதும் இல்லாத வகையில் தனது சொந்த கட்சி பொதுக்குழு உறுப்பினர்களாலேயே ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டார். பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கம் கலந்து கொண்ட நிலையில் தீர்மானங்கள் எதுவுமே செல்லாது என முன்னாள் அமைச்சரும் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சிவி சண்முகம் அதிரடி காட்டிய நிலையில் தண்ணீர் பாட்டில்களை வீசி ஓபிஎஸ்ஐ அங்கிருந்து வெளியேற்றியதாக செய்திகள் வெளியாகின.

அவமானம்
இதனை எதிர்பாராத அவர் கவிழ்ந்த தலையுடன் சோகமே வடிவாக பொதுக்குழுவில் இருந்து வெளியே வந்தார். அதற்கு பிறகு நீதிமன்றம் தேர்தல் ஆணையம் என பல விவகாரங்களில் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி இருக்கிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக ஆதரவு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. தற்போதைய சூழலில் பாஜகவுக்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லை. கூட்டணி தலைமை மற்றும் பிற விவகாரங்களில் எடப்பாடி தனது பேச்சைக் கேட்க வேண்டும் என பிடிவாதமாக இருப்பதால் ஓபிஎஸ்க்கு ஆதரவாக பாஜக மீண்டும் திரும்பி இருக்கிறது என்கின்றனர்.

வழக்கின் விசாரணை
அந்த வகையில் அதிமுக பொது குழு தொடர்பான வழக்கின் விசாரணையில் இன்று தங்கள் தரப்பு வாதங்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எடுத்து வைத்தது. பல்வேறு வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போதிலும் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு எனக்குத்தான் இருக்கிறது. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தான் தயார் என ஓபிஎஸ் பேசியது எடப்பாடி தரப்பையே கதி கலங்க வைத்திருக்கிறது. அதிமுக தலைமை தனது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி கூறிவரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அது போன்று தெரிவிக்கவில்லை.

கட்சி விதிகள்
அதே நேரத்தில் ஏற்கனவே அமலில் இருக்கும் கட்சி விதிகளை ஒரு காரணமாக காட்டி இருக்கிறது. இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பின்னடைவு தான் அதே நேரத்தில் வேறொரு திட்டத்தையும் பன்னீர்செல்வம் வைத்திருக்கிறார் என்கின்றனர் அவர் தரப்பு ஆதரவாளர்கள். அதாவது அடுத்த முறை உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடக்கும்போது இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட இருக்கிறது. அதற்கு பிறகு தீர்ப்பு உடனடியாகவோ அல்லது சில நாட்கள் கழித்து வெளியாகலாம்.

தேர்தலில் போட்டி
அதற்கு முன்னதாக அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற அறிவிப்போடு ஆணையர் தலைமையில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை விடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. பொதுக்குழுவே செல்லாது என்ற தீர்ப்பு மூலம் ஏற்கனவே இருக்கும் நிலையே தொடரும் ஆனால் கட்சித் தலைமையை எவ்வாறு கைப்பற்றுவது என ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள் ஆதரவோடு கட்சியை கைப்பற்ற நினைக்கிறார். இதன் காரணமாகவே தேர்தலை நடத்தலாம் என அவர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

எடப்பாடி ஷாக்
எடப்பாடி வகுத்த புதிய விதிகள் காரணமாக ஓபிஎஸ் தேர்தலில் போட்டியிட முடியாது. அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தால் தனக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறார். மேலும் நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொள்வதற்கான கால சூழல்கள் நிலவுகிறது. அதிமுக தலைமையை கைப்பற்றுவது யார் என நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என வாதம் முன்வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து என்ன செய்வது தங்கள் தரப்பு வாதங்களை எந்த அளவு எடுத்து வைப்பது என்பது குறித்து அவர் தனது தரப்பு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications