பத்தல..பத்தல! எடப்பாடிக்கு எதிராக கேட் போடும் ஓபிஎஸ்! இப்படி ஒரு ப்ளானா? இனிமே கச்சேரி தான் போலயே?
சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் ஓபிஎஸ் தற்போது ஏற்கனவே தீட்டி வைத்து பரனில் போட்டு வைத்திருந்த ஒரு திட்டத்தை மீண்டும் கையில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். இது தகவல் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் சென்றிருக்கும் நிலையில் அதனை சமாளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி எந்த அறிக்கை வெளியிட்டாலும், ஏட்டிக்குப் போட்டியாக தானும் ஒரு அறிக்கையோ அல்லது அறிவிப்போ வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ஓபிஎஸ்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கம் என அதிரடி காட்டி வரும் ஓ.பன்னீர்செல்வம் தற்போது தேர்தல் ஆணையம் நீதிமன்ற வழக்கு என அடுத்தடுத்த சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக பொதுக்குழு
இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில், தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதனை சமாளிக்கும் வகையில் தற்போது இரு தரப்பினரும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவில் நிர்வாகிகள் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கும் நிலையில் அவருக்கு போட்டியாக பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

போட்டி பொதுக்குழு
தற்போது தேர்தல் ஆணையத்தில் உள்ள குறிப்புகளின் படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராக தானே இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஏற்கனவே தான் தயார் செய்து வைத்திருந்த ஒரு பழைய திட்டத்தை கையில் எடுக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது தனது அனுமதியின்றி எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு கூட்டத்தை நடத்தி இடைக்கால பொது செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதை போல தானும் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களை திரட்டி மீண்டும் ஒரு பொது குழுவை கூட்ட ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

தீவிர ஆலோசனை
ஏற்கனவே இதே திட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கையில் எடுத்த நிலையில் ஆகஸ்ட் மாதம் அது தள்ளிப்போனது. இந்த நிலையில் கிட்டத்தட்ட மூன்று மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் பொதுக் குழுவை கூட்டலாமா என ஓ.பன்னீர்செல்வம் தனது நெருங்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பொதுக்குழுவை கூட்டுவது ஓரளவு கை கொடுக்கும் என ஓபிஎஸ்-இன் ஆதரவாளர்கள் கூறியதால் உற்சாகமடைந்துள்ள அவர் தற்போது அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி கூறியிருக்கிறார் .இதை எடுத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் பட்டியலை தயாரிக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
அதே நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் போட்டி பொதுக்குழு நடத்துவது குறித்த தகவல் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் அதிமுகவின் அதிகாரம் மட்டுமல்ல நீதிமன்ற தீர்ப்பும் தங்கள் தரப்புக்கே சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி போட்டி பொதுக்குழுவால் ஏதேனும் சிக்கல் வருமா என சட்டம் நிபுணர்களிடம் ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த மாவட்ட செயலாளர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்களே இடைக்கால பொதுச் செயலாளர் பதவியேற்க முடியும் என்பதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரிய அளவில் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தற்போது இருக்கும் எடப்பாடி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் தரப்புக்கு சென்றால் சிக்கல் அதிகரிக்கும் என்பதால் அதனை சமாளிக்க கண்காணிப்பை தீவிர படுத்த உத்தரவிட்டிருக்கிறார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications