வாரிசுக்கு பெரிய ‘கிஃப்ட்’.. கிடைத்தது க்ரீன் சிக்னல்.. தயாராகும் ஓபிஎஸ்.. பின்னணியில் நடந்தது என்ன?
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப்புக்கு முக்கியமான பதவியை அளிக்க ஓபிஎஸ் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கசிந்து வருகிறது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்களை கட்சி நிர்வாகிகளாக நியமித்து வருகிறார் ஓபிஎஸ்.
தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் தொடங்கி தற்போது ஒன்றிய செயலாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்தகட்டமாக கிளை செயலாளர்களை ஒன்றிய செயலாளர்கள் நியமிக்க இருக்கின்றனர்.
இந்நிலையில் தான், ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப்புக்கு கட்சியின் ஐடி விங் செயலாளர் பொறுப்பை வழங்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய நிர்வாகிகள்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கட்சி ரீதியாக மாவட்டங்களைப் பிரித்து நிர்வாகிகளை நியமனம் செய்வதில் வேகம் காட்டி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். அனைத்து மட்டத்திலும் நிர்வாகிகளை நியமித்த பிறகு, பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என தொடர்ந்து நடத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு திட்டமிட்டுள்ளது.

சாதி + செல்வாக்கு
ஓ.பன்னீர்செல்வம், தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களை ஏற்கனவே தலைமைக் கழக பதவிகளில் நியமித்துள்ளார். இன்னும் சிலரும் தலைமைக் கழக பதவிகளைப் பெற முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. தனது அணி பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அந்தந்த மாவட்டங்களில் சாதி பலம், செல்வாக்கு என கணக்கிட்டு ஓபிஎஸ் நிர்வாகிகளை நியமிப்பதாகக் கூறப்படுகிறது. பல்வேறு சார்பு அணிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்துள்ள ஓபிஎஸ், தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக இதுவரை யாரையும் நியமிக்கவில்லை.

அதிமுக ஐடி விங்
இந்நிலையில், ஐடி விங் செயலாளர் பதவிக்கு அஸ்பயர் சுவாமிநாதனை கேட்டுள்ளார் ஓபிஎஸ். 2012ஆம் ஆண்டு அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு என உருவாக்கப்பட்டபோது, அதன் செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதனை நியமித்தார் ஜெயலலிதா. பின்னர் 2016ல் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியதால், அவருடன் சென்று பணியாற்றினார் அஸ்பயர் சுவாமிநாதன்.

அஸ்பயர் சுவாமிநாதன்
பின்னர், ஓபிஎஸ்- ஈபிஎஸ் மீண்டும் இணைந்த நிலையில், அஸ்பயர் சுவாமிநாதனுக்கு மீண்டும் ஐடி விங் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதன் பின்னர், மாநில செயலாளர் பதவி கலைக்கப்பட்டு மண்டல அளவில் ஐடி விங் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டபோது சென்னை மண்டலத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் சுவாமிநாதன். 2021 தேர்தலுக்குப் பிறகு, தனது சென்னை மண்டல ஐடி விங் தலைவர் பொறுப்பையும் ராஜினாமா செய்தார் அஸ்பயர் சுவாமிநாதன்.

ஐடி விங் செயலாளராக யார்?
ஓபிஎஸ் ஆதரவாளரான அஸ்பயர் சுவாமிநாதன் தற்போது அவர் அணியில் இருக்கிறார். ஐடி விங்கில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவரை மாநில செயலாளராக நியமிக்க ஓபிஎஸ் கேட்ட நிலையில், அவர் தனக்கு ஐடி விங் பதவி வேண்டாம் என மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஓபிஎஸ் கண் முன் வந்த ஒரே சாய்ஸ் ஜெயபிரதீப் தான் என்கிறார்கள். ஜெயபிரதீப்பை ஐடி விங் செயலாளராக நியமிக்க, மற்ற நிர்வாகிகளும் முழுமனதோடு ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.

ஜெயபிரதீப்
ஜெயபிரதீப் தான் ஓ.பன்னீர்செல்வத்தின் சமூக வலைதளங்கள், ஓபிஎஸ் ஆதரவு பக்கங்களை மேற்பார்வை செய்து வருகிறார். மதுரை, தேனியில், ஜெயபிரதீப்பின் ஆதரவாளர்களான இளைஞர்கள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகள், வீடியோக்களை பரப்பும் வேலையை கடந்த சில ஆண்டுகளாகவே செய்து வருகின்றனர். ஈபிஎஸ் உடனான மோதலுக்குப் பிறகு, அவர்களை விமர்சித்தும், சமூக வலைதளங்களில் கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

களப்பணியில் ஜெயபிரதீப்
2019 லோக்சபா தேர்தலில் ஓபி ரவீந்திரநாத், தேனி எம்.பியாக போட்டியிட்ட போதும், சரி, போடியில் ஓ.பி.எஸ் போட்டியிட்ட போதும் சரி, அவர்களின் வெற்றிக்காக ஜெயபிரதீப் தீவிரமாகக் களப் பணியாற்றினார். பல்வேறு அமைப்பினர், சங்கத்தினரைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். அவரது வேகத்தைப் பார்த்து, அவர் தான் 2021 தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்றே தேனி வட்டாரத்தில் அப்போது வதந்திகள் பரவின.

வேகம் + விவேகம்
கடந்த ஜூன் மாதம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஏற்பட்ட பிணக்கைத் தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவாளர்களை ஒருங்கிணைப்பது, சென்னைக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளில் முன்னின்று பணியாற்றி வருகிறார் ஜெயபிரதீப். தொடர்ந்து, எதிரணியில் இருப்பவர்களிடமும் ஜெயபிரதீப் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், முக்குலத்தோர் சமூக சங்கங்களைச் சேர்ந்த புள்ளிகளையும் ரகசியமாகச் சந்தித்து ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். மேலும், சமூக வலைதளங்களிலும் எடப்பாடி பழனிசாமி தரப்பை விமர்சித்து பதிவிட்டு வருகிறார்.

ஓபிஎஸ் கணக்கு
முன்னர் எல்லாம் ஆன்மீக நிகழ்வுகளில் மட்டுமே அதிகமாகத் தென்பட்ட ஜெயபிரதீப் முகம், இப்போது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான அரசியல் நடவடிக்கைகளில் தான் தீவிரமாக இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள நிர்வாகிகளிடமும் தொடர்ந்து பேசி வருகிறார் ஜெயபிரதீப். அவருக்கு முக்கிய பதவி கொடுத்தால், நிச்சயம் அதிமுகவில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் ஓபிஎஸ்ஸுக்கு பலம் அதிகரிக்கும், அதை கருத்தில் கொண்டுதான் இப்போது ஓபிஎஸ் அந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்கிறார்கள் அவரது தரப்பினர். விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறுகின்றனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications