சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக ஒரு ஆலமரம்..மாஜி எம்.எல்.ஏ.முத்துராமலிங்கம் திமுகவுக்கு தாவியது குறித்து ஓ.பி.எஸ்.நறுக் பதில்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக என்பது ஒரு ஆலமரம்.. யார் இதில் இருந்து சென்றாலும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அதிமுக ஒரு ஆலமரம்.. முத்துராமலிங்கம் திமுகவுக்கு தாவியது குறித்து ஓ.பி.எஸ். நறுக் பதில் - வீடியோ
    O Panneerselvam replies on Supporter Muthuramalingam joins with DMK

    அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு உறுதுணையாக ஆதரவாக நின்றவர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம். அவர் மதுரை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்து கொண்டார்.

    இது ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு பின்னடைவாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார் ஓ. பன்னீர்செல்வம். அப்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    O Panneerselvam replies on Supporter Muthuramalingam joins with DMK

    கேள்வி: அதிமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

    பதில்: ஏற்கனவே கூறியதுதான் பிரகாசமாக இருக்கிறது.

    கேள்வி: தர்ம யுத்தத்தின் போது உங்களுக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் அதிமுகவில் இருந்து விலகியதற்கு காரணம் என்ன.?

    பதில்: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது மிகப்பெரிய ஆலமரம், இதில் இருந்து யார் சென்றாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    கேள்வி: தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கிடைக்காத அதிமுக நிர்வாகிகள், திமுக- அமமுகவில் இணைவது அதிமுகவின் ஓட்டு வங்கியை பாதிக்குமா?

    பதில்: எந்தவித பாதிப்பும் இல்லை. இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

    English summary
    Tamilnadu Deputy Chief Minister O Panneerselvam has explained his Supporter Ex MLA Muthuramalingam joined with DMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X