ரொம்ப நம்பினோமே.. 'ஷாக்' ஆன ஓபிஎஸ்.. ஸ்டாலின் கொடுத்த ‘ஏமாற்றம்’.. அடுத்த ஸ்டெப் என்ன?- பரபர ஆலோசனை!
சென்னை : திமுக அரசு தங்களுக்கு சாதகமாகச் செயல்படும் என ஓ.பன்னீர்செல்வம் பெரிதும் நம்பியிருந்த நிலையில், இன்று நடந்த சம்பவம் ஓபிஎஸ் தரப்புக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார்.
எடப்பாடி ஒஅழனிசாமி நேற்று அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விரைவில் அங்கு செல்லத் திட்டமிட்டனர்.
இதற்காக காவல்துறையின் பாதுகாப்பு கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனு அளித்தார். அதற்கு காவல்துறை அனுமதி தர மறுப்பு தெரிவித்துள்ளது.
தலைமை அலுவலகம் செல்வதற்கு ஓபிஎஸ் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று வந்தால், பாதுகாப்பு தர தயாராக இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் ஏமாற்றமடைந்துள்ளார்.

தலைமைக் கழகம் சென்ற ஓபிஎஸ்
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. முன்னதாக, அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த மோதல் தொடர்பான வழக்கில் அலுவலக சாவி ஈபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று எடப்பாடி பழனிசாமி சென்றார். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் முதன்முறையாக நேற்று தலைமை அலுவலகத்துக்கு சென்றார்.

ஓபிஎஸ் திட்டம்
எடப்பாடி பழனிசாமி அங்கு சென்ற நிலையில் ஓபிஎஸ்ஸும் அதிமுக அலுவலகத்துக்கு செல்லத் திட்டமிட்டார். ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ளதாகவும் அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு அளித்தார். ஜேசிடி பிரபாகர் அளித்த மனுவில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி ஓ.பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்தாகவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்வதால் ஓபிஎஸ் கட்சி அலுவலகம் சென்று பணியாற்ற எந்த தடையும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

ஓபிஎஸ்ஸுக்கு திமுக உதவி
அதிமுக மோதல் விவகாரத்தில் திமுக அரசு ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து விமர்சித்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என முதலைமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தது போன்றவற்றை வைத்து அவருக்கு சாதகமாக திமுக அரசு இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும், ஈபிஎஸ்ஸை விமர்சிக்கும் அளவுக்கு ஓபிஎஸ்ஸை ஸ்டாலின் விமர்சிக்காததும் இந்த சந்தேகத்தை எழுப்பியது.

எதிர்பார்த்த ஓபிஎஸ்
ஓபி ரவீந்திரநாத், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது, அரசுக்கு பாராட்டு தெரிவித்தது என திமுக அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டு வருவதால், ஓ.பன்னீர்செல்வமும், ஸ்டாலின் தமக்கு ஆதரவாகவே செயல்படுவார் என எதிர்பார்த்து வருகிறார். சமீபத்தில் கூட, திமுக அரசு கொண்டு வந்த 'புதுமைப்பெண்' திட்டத்தை ஓ.பன்னீர்செல்வம், ஓபி ரவீந்திரநாத் ஆகியோர் பாராட்டியிருந்தனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகழேந்தி உள்ளிட்டோரும் ஸ்டாலினுக்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர்.

மறுத்த போலீஸ்
இந்த இணக்கத்தின் அடிப்படையிலேயே, அதிமுக தலைமை அலுவலகம் செல்ல தனக்கு திமுக அரசின் ஆதரவு கிடைக்கும் என்றும், போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தார் ஓபிஎஸ். போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக தலைமை அலுவலகம் செல்லலாம் என நினைத்தார் ஓபிஎஸ். ஆனால், அவரது தரப்பின் மனுவுக்கு அனுமதி தர மறுத்துள்ளது காவல்துறை. நீதிமன்றத்திற்குச் சென்று அனுமதி பெற்று வரும்படி கூறியுள்ளது காவல்துறை.

பெருத்த ஏமாற்றம்
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தான் மேற்கொள்ளும் இந்த முயற்சி பலித்தால், தன் பலம் கூடும் என எதிர்பார்த்தார் ஓபிஎஸ். ஆனால், காவல்துறை அனுமதி மறுத்திருப்பதன் மூலம், திமுக அரசு இந்த விஷயத்தில் தனக்கு உதவ விரும்பவில்லை என்பதை ஓபிஎஸ் உணர்ந்து ஷாக் ஆகியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களிடம் ஆலோசித்து வருகிறார்.

சந்திக்க வாய்ப்பு?
அடுத்தகட்டமாக சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து ஓபிஎஸ் தரப்பு, அதிமுக அலுவலகம் செல்ல பாதுகாப்பு கோரி மனு அளிக்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஓபிஎஸ் தரப்பினர், முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவும் வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. திமுக அரசின் மறைமுக ஆதரவு தங்களுக்கு நிச்சயம் தேவை என்ற முடிவில் இருக்கும் ஓபிஎஸ், ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடுத்த ஸ்டெப்பை எடுத்து வைப்பார் என்று கூறப்படுகிறது.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications