Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 வாரமாக உடல்நிலை பாதிப்பு.. திடீர் மாரடைப்பு.. ஓ.பன்னீர்செல்வம் மனைவி மரணம்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமின் மனைவி விஜயலட்சுமி இன்று திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

Recommended Video

    #BREAKING ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்!

    தமிழ்நாட்டின் முதல்வராக மூன்று முறை இருந்த ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தேனியில் பூர்வீக வீடு இருந்தாலும் உடல்நலக்குறைவு காரணமாக விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக சென்னையில் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிரமப்பட்டு வந்து இருக்கிறார்.

    வயிறு

    வயிறு

    இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இவருக்கு வயிற்று உபாதை ஏற்பட்டு இருக்கிறது. வயிற்று வலியும், மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ஜெம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

    சிகிச்சை

    சிகிச்சை

    ஜெம் மருத்துவமனையில் இவரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் இவரின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இவரின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை. சாதராண வார்டிலேயே சிகிச்சை பெற்று இருக்கிறார். மூச்சு விடுவதில் மட்டும் அவ்வப்போது சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

    மாரடைப்பு

    மாரடைப்பு

    இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை உடனடியாக அவசர பிரிவிற்கு மாற்றி உள்ளனர். அங்கு மாரடைப்பிற்கு கொடுக்கப்படும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் அவரின் உயிர் பிரிந்துள்ளது. ஏற்கனவே 2 வார சிகிச்சை காரணமாக இவர் நிறைய மருந்துகள் எடுத்து, உடல்நிலை நலிவுற்று இருந்திருக்கிறார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இந்த நிலையில்தான் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணம் அடைந்துள்ளார். எதிர்பாராத இந்த மரணம் காரணமாக ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் விஜயலட்சுமி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+