சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் கேஸ் போடணுமா? விளைவுகளை சந்திக்க நேரிடும்.. டெல்லிக்கு திமுக எம்பி அனுப்பிய கடிதம் -பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: தேசிய சட்ட பல்கலைகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு முறையான இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக திமுக எம்பி வில்சன் கடிதம் எழுதி இருக்கிறார்.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு அளிப்பதற்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

3 மேட்டர்கள்.. நாள் குறிச்சாச்சு.. 3 மேட்டர்கள்.. நாள் குறிச்சாச்சு..

திமுக எம்பி வழக்கறிஞர் வில்சன் மற்றும் திமுக வழக்கறிஞர் அணியின் இடைவிடாத சட்ட போராட்டம் காரணமாக இந்த இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. இவர்கள் தொடுத்த வழக்கு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மூலம் இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

எம்பி வில்சன்

எம்பி வில்சன்

இந்த நிலையில் தேசிய சட்ட பல்கலைகளிலும் முறையான இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று திமுக எம்பி வில்சன் கோரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக மத்திய அரசின் சட்ட துறைக்கும், டெல்லியில் உள்ள கல்வித்துறை மற்றும் சமூக நீதி துறைக்கும், தேசிய சட்ட பல்கலைக்கழக வேந்தர்களுக்கும் வில்சன் கடிதம் எழுதி இருக்கிறார். அதில் மருத்துவ படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதை குறிப்பிட்டு இருக்கிறார்.

வில்சன் கடிதம்

வில்சன் கடிதம்

இந்தியாவில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள், தேசிய சட்ட பள்ளிகளில் முறையான எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடைதுக்கீடு பின்பற்றப்படுவது இல்லை. கொச்சி , லக்னோவில் உள்ள தேசிய சட்ட பள்ளிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசியினருக்கு வழங்கப்படும் மாநில இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படுகிறது. அதே சமயம் பிற மாநிலங்களில் தேசிய சட்ட பள்ளிகளில் இந்த ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை. அங்கு எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

 ஓபிசி அநீதி

ஓபிசி அநீதி

அவர்களுக்கான உரிமை பறிக்கப்பட்டுள்ளது. திமுக தொடுத்த வழக்கு காரணமாகவும், நாங்கள் நடத்திய சட்ட போராட்டத்தால் ஓ.பி.சி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை சட்ட பல்கலைக்கழக நிர்வாகம் மறக்க கூடாது. மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு கொண்டு வருவது போல சட்ட படிப்புகளிலும் உடனே இந்த விதியை அமல்படுத்த வேண்டும்.

வில்சன் விளைவு

வில்சன் விளைவு

இதற்காக தனியாக வழக்கு தொடுக்க வேண்டும், கோர்ட் உத்தரவு வேண்டும் என்று காத்திருக்க வேண்டாம். மீண்டும் ஒருவர் கேஸ் போட வேண்டும் என்று காத்திருக்க வேண்டாம். மாறாக உடனே சட்டப் படிப்பில் அகில இந்திய மற்றும் மாநில அளவிலான எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இல்லை என்றால் சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எம்பி வில்சன் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
OBC, SC, ST reservation: DMK MP Wilson sends letter to Delhi on Law Universities quota.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X