இருமடங்கு உயர்ந்த எண்ணெய் விலை .. கச்சா எண்ணெய்யுடன் போட்டி போடும் நல்லெண்ணெய்.. கலக்கத்தில் மக்கள்!
சென்னை : உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ள நிலையில், போருக்கு முன் ரூ.100ஆக இருந்த ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது ரூ.200ஆக விற்பனையாகிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 40 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் போரின் தாக்கம் மற்றும் பாதிப்பு சர்வதேச அளவில் எதிரொலித்து வருகிறது.
போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை நிலை இல்லாமல் இருப்பதால் சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் விலையை விட இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

உக்ரைன் போர்
இந்நிலையில் உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ள நிலையில், போருக்கு முன் ரூ.100ஆக இருந்த ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது ரூ.200ஆக விற்பனையாகிறது. தற்போதுள்ள சூழலில் சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெயின் விலை பொதுவாக சூரியகாந்தி எண்ணெயை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது, அதே நேரத்தில் சூரியகாந்தி எண்ணெயின் உலகளாவிய உற்பத்தி ஆலிவ் எண்ணெயை விட ஏழு மடங்கு அதிகமாக உள்ளது என்று இத்தாலிய ஆலிவ் எண்ணெய் பிராண்டான பிலிப்போ பெரியோவின் U.K தலைவர் வால்டர் ஜான்ரே கூறுகிறார்.

சூரியகாந்தி எண்ணெய் விலை
ஆனால் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சூரிய காந்தி எண்ணெயின் தேவை மற்றும் உபயோகம் ஆலிவ் எண்ணெயைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது. தற்போதுள்ள சூழலில் உலகளாவிய சூரியகாந்தி எண்ணெய் விலை கடந்த ஆண்டை விட மார்ச் மாத இறுதியில் 44% உயர்ந்துள்ளது. அதே சமயம் ராப்சீட் எண்ணெய் 72% உயர்ந்துள்ளது என்று சந்தை தரவு நிறுவனமான Mintec Ltd தெரிவித்துள்ளது. சோயாபீன் எண்ணெயின் விலை 41% உயர்ந்துள்ளது, பாமாயில் 61% அதிகரித்துள்ளது.

கடும் உயர்வு
ஆலிவ் எண்ணெயைத் தவிர மற்ற அனைத்தும் மார்ச் மாத இறுதியில் அதிக விலையை எட்டியதாக மின்டெக் கூறுகிறது. பிப்ரவரி மாதத்தில் 125 ரூபாயாக இருந்த சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது 200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட நல்லெண்ணெய் தற்போது 250 ரூபாய்க்கும் , 180 ரூபாய்க்கு விற்கப்பட்ட கடலை எண்ணெய் தற்போது 220 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும் 160 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய் எண்ணெய் தற்போது 200 ரூபாய்க்கும், 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரீஃபைண்ட் ஆயில் தற்போது 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

காரணம் என்ன?
இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உக்ரைன் போருக்கும் சூரியகாந்தி எண்ணெய்க்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். அதற்கான காரணம் கண்டிப்பாக உண்டு. இந்திய நாட்டின் ஒட்டுமொத்த சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் கருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து தான் இந்தியாவுக்கு 90 சதவீத எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.

விதைகள் இல்லாமல் தவிப்பு
சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்பு ஆலைகள் பலவும் தற்போது சூரியகாந்தி விதைகள் இல்லாமல் தவித்து வரும் நிலையில் ஏற்றுமதி இறக்குமதியில் பலத்த இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவினங்கள் அதிகரித்து உள்ளதும் எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் வரும் காலங்களில் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை உயரலாம் எனவும் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications