ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை..புகார்கள் மீது நடவடிக்கை எப்போது? அமைச்சர் சொன்னது இதுதான்!
சென்னை: ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் வருகிறது. புகார்கள் மீது ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை என தொடர் விடுமுறை வருவதற்குள் நடவடிக்கைக்கை எடுக்கப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் படிக்கவும், வேலை செய்யவும் வந்து வசிக்கும் மக்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு சொந்த ஊருக்கு செல்வார்கள். இப்போது 3 அல்லது 4 நாட்கள் தொடர் விடுமுறை விடும் நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர்.
இதனால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயில்களில் செல்ல இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் புக் செய்கின்றனர். கடந்த வாரம் சுதந்திர தின விடுமுறையுடன் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. அப்போது சொந்த ஊர் செல்ல ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் புக் செய்தவர்கள் மயங்கி விழாத குறைதான். 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து பலரும் புகார் அளித்தனர்.

கட்டணக்கொள்ளை புகார்
இந்த புகார்கள் மீதான நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்,
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதியில் இருந்து 16ம் தேதி வரை தொடர் விடுமுறை நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் முன்னிலையில் இணை ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் செய்யப்பட்டன. அப்படி ஆய்வு செய்தபோது 953 பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

புகார் அளித்தது எத்தனை பேர்
அதில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் செய்த 97 பேருக்கு ரூ.68,800 கட்டணம் திரும்ப வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 4 ஆம்னி பேருந்துகள் அனுமதி இல்லாமல் இயக்கப்பட்டதால் நடவடிக்கை எடுத்து அபராத தொகையாக ரூ.11 லட்சத்து 4 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. எந்த ஆம்னி பேருந்துகளாவது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயணிகளுக்கு பணம் திரும்ப வழங்கப்படும்.

தொடர் விடுமுறை
வருகிற அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, தீபாவளி என தொடர் விடுமுறை வருகிறது. அப்போது, இதுபோன்ற பிரச்னை வராமல், அதை எப்படி கையாள்வது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
கடந்த நாட்களைபோல தொடர்ந்து புகார் வரும் ஆம்னி பேருந்துகள் மீது, முக்கிய நகரங்களில் உள்ள வட்டார அலுவலக அதிகாரிகளே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்தை பொறுத்தவரை விமானம், ரயிலைபோல ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் கட்டணம் கூடுதலாக வசூலிக்கிறார்கள். அரசு தொடர் நடவடிக்கை மூலம் இதை கட்டுப்படுத்தியுள்ளோம்.

கட்டண உயர்வு ஏன்?
ஆம்னி பேருந்து மற்ற நாட்களில் 10, 5 பயணிகளுடன் செல்லும் நிலை உள்ளது. அவர்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்பு, விழா காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஒன்றுதான். அதனால் கட்டண உயர்வை பயன்படுத்துகிறார்கள். சிலர் விரும்பி, பணத்தை ஒரு பிரச்னையாக எடுத்துக்கொள்ளாமல் ஆம்னி பேருந்தில் பயணம் செய்கிறார்கள். ஆம்னி பேருந்து என்பது ஒப்பந்த ஊர்தி. கூடுதல் கட்டணம் செலுத்தி ஆம்னி பஸ்சில் செல்கிறார்கள். இதிலும், மிக குறைந்த பயணிகளே புகார் அளிக்கிறார்கள்.

சொகுசாக செல்கிறார்கள்
தொடர் விடுமுறை நாட்களில், பொதுமக்கள் வசதியாக சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்கி வருகிறோம். தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் முன்கூட்டியே அட்டவணை அறிவிக்கப்பட்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த விடுமுறையின்போது, அரசு சார்பில் இரவு 12 மணிக்கு மேல் வரை கூட அரசு பேருந்து இயக்கப்பட்டது. ஆனால், தனியார் பேருந்து பயணம் செய்ய விரும்புகிறவர்கள் அவர்கள் கட்டணத்தை உயர்த்தினாலும் பரவாயில்லை என்று சொகுசாக பயணம் செய்ய விரும்பி செல்கிறார்கள்.

அரசு பஸ்கள்
பொதுமக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்தால் இதுபோன்ற பிரச்னை இருக்காது. மக்கள்தான் அரசு பஸ்சை பயன்படுத்த வேண்டும். டீசல் கட்டணம் உயர்ந்த பிறகும், அரசு பேருந்தில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. விழாக் காலங்களில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனால் மக்கள் அரசு பேருந்தில் விரும்பி பயணம் செய்ய வேண்டும்.

புகார்கள் மீது நடவடிக்கை
கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து குறைவான புகார்களே வந்துள்ளது. தற்போது கூட்டம் நடத்தி இதற்கு நிரந்தர தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வருகிற ஆயுத பூஜை, தீபாவளி என தொடர் விடுமுறை மற்றும் விழா காலம் வருவதற்குள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications