வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேட்புமனு தாக்கல் செய்ய மொத்தம் 8 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால், 4 நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இப்படி இருக்கையில், 4 நாட்கள் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

- மனு தாக்கல் தொடக்கம்: மார்ச் 30, 2026 (திங்கள்)
- மனு தாக்கல் முடிவு: ஏப்ரல் 6, 2026 (திங்கள்)
- மொத்த நாட்கள்: 8 நாட்கள்
இந்த 8 நாட்களில் மொத்தம் 4 நாட்கள் அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை வருவதால், அந்த நாட்களில் மனு தாக்கல் செய்ய முடியாது.
- ஏப்ரல் 2 (வியாழன்): மகாவீர் ஜெயந்தி (அரசு விடுமுறை)
- ஏப்ரல் 3 (வெள்ளி): புனித வெள்ளி (அரசு விடுமுறை)
- ஏப்ரல் 4 (சனி): சனி (பொதுவாக தேர்தல் பணிகளில் இதுவும் விடுமுறை நாளாகவே கருதப்படுகிறது - Negotiable Instruments Act படி)
- ஏப்ரல் 5 (ஞாயிறு): வார விடுமுறை












Click it and Unblock the Notifications