தமிழ்நாட்டிலும் நுழைந்த ஒன்லி ஃபேன்ஸ் கலாச்சாரம்.. போட்டோ போட்டே மாதம் ரூ.30 லட்சம் ஈட்டும் பெண்கள்
சென்னை: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பிரபலமாக இருக்கும் ஒன்லி ஃபேன்ஸ் கலாச்சாரம் இந்தியாவிலும் பிரபலம் அடைய தொடங்கி உள்ளது. வேறு வேறு செயலிகள் வழியாக இந்த கலாச்சாரம் பெண்கள் இடையே அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஒன்லி ஃபேன்ஸ், 2016 இல் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் பிரபலமாக இருந்தாலும்.. இது பிரிட்டிஷ் சந்தா அடிப்படையிலான தளமாகும். இதை எளிதாக விளக்க வேண்டும் என்றால் "A" என்ற நடிகையை எடுத்துக்கொள்வோம். "A" என்ற நடிகை இன்ஸ்டாகிராமில் இருக்கிறார். அவர் அதில் புகைப்படங்களை போடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

இப்போது அவரின் புகைப்படங்களை எல்லோரும் பார்க்கலாம். அதை பார்க்க நெட்டிசன்கள் பணம் கொடுக்க வேண்டியது இல்லை. ஆனால் இப்போது அதே நடிகை "A".. நான் இன்னும் பல புகைப்படங்களை போட போகிறேன். அதை எல்லோரும் பார்க்க முடியாது. சில நெருக்கமான ரசிகர்கள் மட்டுமே பார்க்கலாம். ஆனால் அதற்கு காசு கொடுக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
அதாவது "A" என்ற அந்த நடிகை வேறு சில exclusive புகைப்படங்களை வெளியிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அல்லது சில அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுகிறார் என்றும் வைத்துக்கொள்வோம். இந்த புகைப்படங்களை பார்க்க மாதம் ரூ. 300 கொடுக்க வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? சரி.. 10 ஆயிரம் பேர் இதை ஏற்றுக்கொண்டு அந்த "A" என்ற நடிகைக்கு சப்ஸ்கிரைப் செய்கிறார்கள் என்றால் 3000000 ரூபாய் அதாவது 30 லட்சம் வருமானம் ஈட்ட முடியும். இந்த தொகை உதாரணம்தான் ஒன்லி ஃபேன்ஸ் வழியாக பெண்கள் பலர் பல கோடிகளை மாதங்களில் சம்பாதிக்கிறார்கள். இதில் ஒன்லி ஃபேன்ஸ் செயலிக்கு கட்டணமாக குறிப்பிட்ட தொகை சர்வீஸ் சார்ஜ் கொடுக்க வேண்டும்.
ஒன்லி ஃபேன்ஸ் இப்படித்தான் செயல்படுகிறது. ஒன்லி ஃபேன்ஸ் இந்தியாவில் தடை இல்லை. ஆனால் இந்தியாவில் அவ்வளவு பிரபலம் இல்லை. அமெரிக்காவில் சிலர் பெண்களின் கால், கை போன்ற சாதாரண பாகங்களை பார்க்க கூட பல லட்சம் வழங்கும் வழக்கம் உள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பிரபலமாக இருக்கும் ஒன்லி ஃபேன்ஸ் கலாச்சாரம் இந்தியாவிலும் பிரபலம் அடைய தொடங்கி உள்ளது. வேறு வேறு செயலிகள் வழியாக இந்த கலாச்சாரம் பெண்கள் இடையே அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் போன்ற செயல்பாடுகள் மூலம் பல பெண்கள் பணம் பெற தொடங்கி உள்ளனர்.
முக்கியமாக இப்போது இன்ஸ்டாவில் பிரபலமாகி இருக்கும் அரோரா சின்கிளேர் என்ற பெண் தனது exclusive புகைப்படங்களை பார்க்க 390 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளார். இவரை 7 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதன் மூலம் அவர் மாதம் 25 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுக்க பல நாடுகளில் கடுமையான விமர்சனங்களை, விவாதங்களை இந்த செயல்முறை பெற்றுள்ளது. ஆனால் பெண்கள் இடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த பழக்கம்தான் தற்போது இந்தியாவிலும் கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக தமிழ்நாட்டிலும் பெண்கள் இதை பயன்படுத்தி வருமானம் ஈட்ட தொடங்கி உள்ளனர்.
பெண்களின் உடலை போகப்பொருளாக பயன்படுத்துவது.. உடல் பாகங்களை காட்டி பொருளாதாரம் ஈட்டுவது.. பார்ன் பயன்பாட்டை ஊக்குவிப்பது போன்ற கடுமையான விமர்சனங்கள் இதற்கு எதிராக வைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இந்த செயல்பாடு தீவிரம் அடைவது மக்களிடையே கடுமையான விவாதங்களை, விமர்சனங்களை சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications