தமிழகத்தில் தாக்குதல்..சதி திட்டம்..ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை..3 நாட்களில் 3,095 ரவுடிகள் கைது
சென்னை: ஆபரேஷன் 'மின்னல் ரவுடி வேட்டை' மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் கொலை, கொலை முயற்சி மற்றும் கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டு வந்த 3,095 ரவுடிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து அரிவாள், பட்டாக்கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த மாதம் தமிழகம் முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கோவை, மதுரை, திண்டுக்கல், கடலூர், கன்னியாகுமரி, தாம்பரம் உள்பட தமிழகம் முழுவதும் 19 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு சம்பவங்கள் நடந்தது. தஞ்சை பகுதியில் அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன.
அதைதொடர்ந்து பெட் ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே சேலத்தில் தேசிய பாதுகாப்பு முகமை சோதனையில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சேலத்தை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி,24 சஞ்சய் பிரகாஷ் 24 ஆகியோரை கைது செய்தனர்.

சயனைட் குப்பி
அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் தமிழகத்தில் பெரிய அளவில் தாக்குதல் தொடர்பான ஆவணங்கள், அரசியல் தலைவர்களை கொலை செய்யும் வகையில் ஆன்லைன் மூலம் துப்பாக்கி தயாரித்தது. தோட்டாக்கள் தயாரித்தது, வெடி பொருட்கள் தயாரித்ததற்கான ஆவணங்கள் சிக்கியது. மேலும், தாக்குதல் சம்பவத்தின் போது போலீசாரிடம் சிக்காமல் இருக்க சயனைட் குப்பியும் தயாரித்துள்ளனர். அதற்காக காட்டில் உள்ள குறிப்பிட்ட செடியின் சாறு, மற்றொரு செடியின் விதைகளை விஷமாக சேகரித்து சயனைட் தயாரித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

சதி திட்டம் முறியடிப்பு
கைது செய்யப்பட்ட இரண்டு வாலிபர்களும் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தின் மறைமுக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இரண்டு வாலிபர்களும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக ஆன்லைன் மூலம் வாக்கி டாக்கி வாங்கி அதை ரகசியமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
எனவே தமிழகத்தில் பெரிய அளவில் தாக்குதல் சம்பவங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் பேரணி
இதனிடையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நவம்பர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் பேரணி நடக்க உள்ளது. இந்த பேரணியின் போது பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்று மத்திய உளவுத்துறை மற்றும் மாநில உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதை தொடர்ந்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்தும் முக்கிய நிர்வாகிகளான மதுரை, கோவை பகுதிகளை சேர்ந்த 4 ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல், இந்து அமைப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிர்வாகிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரவுடிகள் தேடுதல் வேட்டை
மத்திய உளவுத்துறை மற்றும் மாநில உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாநிலத்தில் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து என 10க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் ஏ.பிளஸ் கேட்டகிரியில் உள்ள தாதாக்கள், ரவுடிகள், பி மற்றும் பி. பிளஸ் ரவுடிகள் மற்றும் சி பிரிவு ரவுடிகளை கூண்டோடு கைது செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபுக்கு உத்தரவிட்டார்.

மின்னல் ரவுடி வேட்டை
அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக ரவுடிகளுக்கு எதிரான 'மின்னல் ரவுடி வேட்டை' என்ற பெயரில் பெரிய அளவில் ரவுடிகள் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டங்களில் பிரபல தாதாவாக வலம் வந்த ராக்கெட் ராஜா உள்ளிட்ட ரவுடிகள் பலர் இந்த மின்னல் ரவுடி வேட்டையில் கைது ெசய்யப்பட்டுள்ளனர்.

3,095 ரவுடிகள் கைது
சென்னை,மதுரை, கோவை, திருச்சி, சேலம் என 9 மாநகர போலீஸ் கமிஷனர்கள்மற்றும் 37 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் இந்த அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 72 மணி நேரத்தில் நடந்து முடிந்த 'மின்னல் ரவுடி வேட்டை'யில் 3,095 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், அரிவாள், பட்டாக்கத்திகள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவு ரவுடிகள்
கைது செய்யப்பட்ட ரவுடிகளில் 489 பேர் பல்வேறு வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடிகள் ஆவார்கள். நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 216 ரவுடிகள் என மொத்தம் 705 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2,390 ரவுடிகள் காவல் நிலைய பதிவேடு குற்றவாளிகள் ஆவார்கள். இவர்களிடம் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கமிஷனர்கள் முன்னிலையில் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. அதையும் மீறி குற்றங்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட ரவுடிகள் 6 மாதகாலம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications