சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னை ஓரம் கட்ட முடியாது.. 5 ஆண்டுகளுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளர்.. ஓபிஎஸ் தரப்பு வாதம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர எனக்கு முழு உரிமை உள்ளது என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது.

பொதுக் குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல் செய்தார். இவரது மனு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை தொடங்கியது.

இதில் ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பு என காரசாரமாக விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஓபிஎஸ் தரப்பு தனது வாதத்தில், 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளரை ஓரம் கட்ட முடியாது.

சீக்ரெட்டை கசியவிடுவோம்! எடப்பாடி ஆதரவாளர்கள் 17 பேருக்கு செக்! ஓபிஎஸ் டீமின் விபரீத லிஸ்ட்! பின்னணி சீக்ரெட்டை கசியவிடுவோம்! எடப்பாடி ஆதரவாளர்கள் 17 பேருக்கு செக்! ஓபிஎஸ் டீமின் விபரீத லிஸ்ட்! பின்னணி

தேர்தல்

தேர்தல்

தேர்தல் மூலமாக தேர்வு செய்த என்னை பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள். பதவிக்காலம் உள்ள 5 ஆண்டுகள் வரை நான்தான் ஒருங்கிணைப்பாளர். அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர எனக்கு முழு உரிமை உள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்காகவே இந்த பொதுக் குழுவை கூட்டியுள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்திற்கு முற்றிலும் மாறுபாடான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள்.

பொதுக் குழு

பொதுக் குழு

பொதுக் குழுவை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்தான் கூட்ட முடியும். பொதுக் குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு எனக்கு அழைப்பிதழ் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கு தொடர்வதற்கு ஒரு நாளுக்கு முன்புதான் பொதுக் குழு நோட்டீஸ் எனக்கு கிடைத்தது. அதில் தலைமை கழக நிர்வாகிகள் பொதுக் குழுவை கூட்டுவதாக தெரிவித்துள்ளார்கள்.தலைமை கழக நிர்வாகிகள் என்ற அமைப்பே அதிமுகவில் இல்லை.

நீதிமன்றம்

நீதிமன்றம்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தீர்மானங்களும் பொதுக் குழுவில தாக்கல் செய்த தீர்மானங்களும் வெவ்வேறானவை. பொதுக் குழு நோட்டீஸில் யாருடைய கையெழுத்தும் இல்லை என ஓபிஎஸ் தரப்பு வாதத்தை முன் வைத்தனர். 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த பொதுக் குழு தொடர்பான விவாதங்கள் நீடித்து வருகின்றன. இதனால் இந்த பொதுக் குழு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Recommended Video

    தனிப்பட்ட விருப்பத்திற்காக கட்சியை கூறு போடுபவர்களை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் - சசிகலா
    பொதுக் குழு

    பொதுக் குழு

    ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுவின் போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. அப்படி இருக்கும் போது ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்கும் என்ற அறிவிப்பை தமிழ்மகன் உசேன் எப்படி அறிவிக்க முடியும்? என நீதிபதியும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    OPS faction says that for 5 years i am the only ADMK Organiser. He is not be sidelined.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X