உப்பு திண்ணா தண்ணி குடிக்கனும்! இது சும்மா சேம்பிள் தான்! இனிமேதான் எல்லாமே இருக்கு! பளீர் புகழேந்தி
சென்னை : உப்பை தின்றவர் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என்பதுதான் உண்மை. தற்போது நடைபெற்று வரும் சோதனைகள் அதைத்தான் காட்டுகிறது. சட்டப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் சுமார் 12,000 உள்ளாட்சி பதவிகளை தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டவர் தான் எஸ்பி வேலுமணி அவருக்கு உடந்தையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றிய போது அதிக விலை கொடுத்து எல்இடி விளக்குகளை வாங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் சென்னை கோவை உட்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை முதல் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அவரது ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.

உப்பை தின்றவர்
இந்நிலையில் உப்பை தின்றவர் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என்பதுதான் உண்மை. தற்போது நடைபெற்று வரும் சோதனைகள் அதைத்தான் காட்டுகிறது என ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து ஒன் இந்தியா தமிழிடம் பேசிய அவர்," உப்பை தின்றவர் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என்பதுதான் உண்மை. தற்போது நடைபெற்று வரும் சோதனைகள் அதைத்தான் காட்டுகிறது. சட்டப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் சுமார் 12,000 உள்ளாட்சி பதவிகளை தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டவர் தான் எஸ்பி வேலுமணி அவருக்கு உடந்தையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி.

எஸ்பி வேலுமணி
பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகள் நிரப்பப்படாமல் அதில் ஒட்டுமொத்த வருமானத்தையும் கொள்ளையடித்தது எஸ்பி வேலுமணி தான். எல்இடி பல்புகளில் மட்டும் ஊழல் நடக்கவில்லை கொசு மருந்து கொள்முதல், மெட்ரோ வரை மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி என அதிகாரம் முழுவதையும் ஒருவரை வைத்துக்கொண்டு அடித்த கொள்ளை என் காரணமாகத்தான் இந்த நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. தற்போது 500 கோடி ஊழல் என்பது இதுவரை எடப்பாடி பழனிச்சாமியும் எஸ்பி வேலுமணியும் இணைந்து நடத்தியதில் வெறும் நான்கு அல்லது ஐந்து சதவீதம் மட்டுமே இன்னும் அவர்கள் செய்த ஊழல் 95 சதவீதம் மீதம் இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி
இந்தக் கொள்ளைகளின் கதாநாயகன் எடப்பாடி பழனிச்சாமி அவர் ஆட்டுவித்தார் எஸ்பி வேலுமணி ஆடினார். இவ்வளவு ஊழல்களையும் செய்துவிட்டு தற்போது ஒப்பாரி வைப்பது ஏன். சோதனை என்றால் அவர்கள் என்ன சொல்ல வேண்டும் இது அரசியல் கால் முயற்சி காரணமாக நடத்தப்படுகிறது. எங்கள் மேல் குற்றம் இல்லை நாங்கள் சட்டப்படி நிரூபிப்போம் என சொல்ல வேண்டியது தானே ஏன் அவர்கள் அப்படி சொல்வதில்லை.சோதனை என்றவுடன் வீட்டின் முன் தொண்டர்களை குவித்து கொள்வது எம்எல்ஏக்களை அராஜகம் செய்வது என அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது ஏன். என்னை பொறுத்தவரை கோவை போலீசாரின் மீது எனக்கு கடும் அதிருப்தி உள்ளது. சோதனை நடக்கும் போது கூட்டம் வருகிறது என்பது தெரியாதா?

நாகரீகம் அற்ற செயல்
சோதனை நடக்கிறது என்றால் முன்கூட்டியே தடுப்புகளை அமைத்து ஆதரவாளர்கள் குவியாமல் தடுக்க வேண்டும் அதை விட்டுவிட்டு உள்ளே சோதனை வெளியே போராட்டம் என வேடிக்கை பார்ப்பது எந்த வகையிலானது என்பது எனக்கு புரியவில்லை . கோவை காவல்துறை இப்படித்தான் முதல்வர் ஸ்டாலினை ஏமாற்றுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. இது எந்த மாதிரியான விஷயம் என்பது எனக்கு புரியவில்லை. சோதனை என்றால் போராட்டம் நடத்துபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் ஆனால் காலை முதல் மாலை வரை தொண்டர்களை குவிய விட்டு வேடிக்கை பார்ப்பது என்பது காவல்துறையில் நாகரீகம் அற்ற செயல். அடுத்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சோதனை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதற்காக தொடரப்பட்டிருக்கிறது. அதில் நடந்த ஊழல் அனைவருக்குமே தெரியும்.

சி.விஜயபாஸ்கர்
மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதிக்கு பணம் தர முடியாத மருத்துவக் கல்லூரியிடம் இடத்தை எழுதி வாங்கி இருக்கிறார் அந்த பெரிய மனிதர். இதுவும் பல கோடி ஊழல் நடந்திருக்கும் இதில் அவரை மீறி ஊழல் நடந்துப்பதற்கு வாய்ப்பே இல்லை. அப்போதிருந்த மருத்துவத்துறை அதிகாரிகளை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அப்போதிருந்த தலைமை செயலாளரும் இரவோடு இரவாக கூப்பிட்டு மிரட்டினர். ஊழலை விட பெரிய வேதனையாக இருப்பது ஏன் அரசு இன்னும் இவர்களை கைது செய்யாமல் இருக்கிறது என்பதுதான் ஊழல் நடைபெற்றது உண்மை பாதிக்கப்பட்டு இருப்பதும் உண்மை என்றால் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டியது தானே ஏன் இத்தனை நாட்களாக சோதனை சோதனை என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கிறது உடனடியாக ஊழலில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை" என்றார்.












Click it and Unblock the Notifications