கொங்கு? எல்லாரும் வாங்க..ஆல்வேஸ் வெல்கம்ஸ் யூ! சென்னையில் கூடும் ர.ர.க்கள்! ஓபிஎஸ் போட்ட திட்டம்!
சென்னை : தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி எந்த அறிக்கை வெளியிட்டாலும், ஏட்டிக்குப் போட்டியாக தானும் ஒரு அறிக்கையோ அல்லது அறிவிப்போ வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ஓபிஎஸ்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கம் என அதிரடி காட்டி வரும் ஓ.பன்னீர்செல்வம் தற்போது தேர்தல் ஆணையம் நீதிமன்ற வழக்கு என அடுத்தடுத்த சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வம்
இவை எதுவும் கைக்கொடுக்காவிட்டால் ஓ.பன்னீர்செல்வம் தனது கடைசி அஸ்திரமாக தர்மயுத்தத்தின் அப்டேட் வெர்ஷனான தொண்டர்களிடம் நீதி கேட்டு புரட்சி பயணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுரையில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்த புரட்சி பயணமானது, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

திடீர் ஆலோசனை
இபிஎஸ்க்கு ஆதரவு அதிகமாக உள்ள கொங்கு மண்டலம் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகளின் ஆலோசனையைப் பொறுத்து பயணம் மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் உள்ள தனியார் விடுதியில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொங்கு நிர்வாகிகள்
இதற்காக சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் சென்னைக்கு வருகை தர உள்ளனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது. இதற்காகவே இன்று ஓபிஎஸ் தரப்பில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள கொங்கு நிர்வாகிகளுக்கே அதிகளவில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சசிகலா
இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் கூட்டங்கள் நடத்துவது சசிகலா டிடிவி தினகரனுடன் சந்திப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகளான வைத்தியலிங்கம் , வெல்லமண்டி நடராஜன், ஜேசிபிடி பிரபாகர் உள்ளிட்டோர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாலை சசிகலா ஓபிஎஸ் சந்திப்பு குறித்த தகவல்களும் வெளியாகலாம் என்கின்றனர் விவரம் அறிந்த ரத்தத்தின் ரத்தங்கள்.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
தேன்கூட்டில் கல்லெறிந்ததா தவெக? வேலுமணி கிட்ட சிவி சண்முகம் கேட்ட அந்த கேள்வி? அப்ப எடப்பாடி முடிவு? -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications