மழையில சூடான “டீ” குடிக்க ஆசை.. ஆனால் “கப்”ஐ காணோம்! 10 செகன்ட்ல கண்டுபிடிச்சு உதவ முடியுமா?
சென்னை: கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் ஆப்டிகல் இல்லியூசன் படங்களில் உள்ள புதிர்களை கண்டுபிடிப்பது பொழுதுபோக்காகவும், ஆர்வமூட்டும் அம்சமாகவும் மாறி இருக்கிறது. அந்த வகையில் இந்த செய்தியின் உள்ளே ஒரு ஆப்டிகல் இல்லியூசன் கார்ட்டூன் படம் இணைக்கப்பட்டு இருக்கிறது. உங்கள் தேடல் மற்றும் கவனிக்கும் ஆற்றலை அறிய 10 வினாடிகளில் காணாமல்போன டீ கப்பை கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள்.
ஓவியங்கள் பல இருந்தாலும் அதில் ஆப்டிகல் இல்லியூசன் ஓவியங்களுக்கு என ஒரு தனி வரவேற்பு இருந்து வருகிறது. அறிவாற்றல் மற்றும் கவனத்திறன் சார்ந்த மாயைகள் ஆப்டிகல் இல்லியூசன்களில் ஒரு ரகம்.
இந்த ஆப்டிகல் இல்லியூசன் படங்களில் ஏதாவது ஒரு பொருள், உயிரினம் அல்லது எழுத்து, உருவம் வேறொரு தோற்றத்திற்குள் மறைத்து வைத்து இருப்பார்கள். இதனை கண்டறிய முயற்சி செய்வதால் சிந்தனை, தேடல் ஆற்றல் வளரும் எனப்படுகிறது.

ஆப்டிகல் இல்லியூசன்
மூளையை கசக்க வைப்பதுடன், நல்ல சிந்தனை ஆற்றலை இந்த ஆப்டிகல் இல்லியூசன் புகைப்படங்கள் உங்கள் தரும். ஆழமாக கவர்ந்து இழுக்கும் புகைப்படங்கள், ஓவியங்களுக்குள் ஏதாவது ஒரு ரகசிய தகவல், பொருள் இருந்தால் ஸ்பெஷலாக இருக்குமல்லவா? ஆப்டிகல் இல்லியூசன் ரகத்தின் ஒரு வெளிப்படையான தோற்றம் என்பது ஊடகங்களில் வெளியிடப்படும் பேசும் படங்கள்.

2 படங்களுக்கு இடையிலான வித்தியாசம்
அதேபோன்றுதான் நாளிதழ்களில் ஒரே மாதிரியான 2 படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்ற புதிரும் இந்த ஆப்டிகல் இல்லியூசனின் வகைதான். அனைத்து விதமான ஆப்டிகல் இல்லியூசன் படங்களின் நோக்கமும் புகைப்பட புதிர்களை கண்டுபிடிப்பதுதான். ஒருவரின் அறிவாற்றல் மற்றும் கவனிப்பு திறனை அறிந்துகொள்ளவதற்கான எளிய வழி.

சுவாரஸ்யமும் சவாலும்
ஒரு புகைப்படத்தின் மூலம் அது சொல்ல வரும் செய்தியை எளிதில் அறிந்துகொள்வதே பேசும் படம் எனப்படுகிறது. ஆனால், அந்த தகவல் ஆப்டிகல் இல்லியூசனில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும். சாதாரண ஓவியமாக, புகைப்படமாக நாம் கடந்து செல்லாமல் அதில் ஒளிந்து இருக்கும் தோற்றத்தை கண்டுபிடிப்பது சற்று சவாலான காரியம் என்றாலும் சுவாரஸ்யத்துக்கு அதில் பஞ்சம் இருக்காது.

இன்றைய புதிர்
இன்றைய புதிருக்கான ஆப்டிகல் இல்லியூசன் கார்ட்டூன் மேலே இணைக்கப்பட்டு உள்ளது. இது ஒரு அலமாறியின் ஓவியமாகும். அதில் ஆடைகள், காலணிகள், கைப்பைகள், பெட்டிகள், தொப்பி, கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடை போன்றவை உள்ளன. அத்துடன் ஒரு டீ கப்பும் உள்ளது. மேற்குறிப்பிட்ட பொருட்களை போல் அது தெளிவாக தெரியாது அதை நீங்கள் 10 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்தால் அடுத்த கீழே உள்ள விடையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இதுதான் விடை
டீ கப்பை 10 வினாடிகளில் கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். படத்தில் உள்ள அலமாறி 4 கட்டங்களை கொண்டது. அதில் மேலே உள்ள 2 கட்டங்களிலும் அந்த டீ கப் இல்லை. கீழே கிறிஸ்துமஸ் தாத்தா உடை இருக்கும் இடதுபக்க கட்டத்திலு அந்த கப் இல்லை. கீழே வலதுபுறமாக உள்ள கட்டத்தின் கீழே அந்த டீ கப் உள்ளது. பல புள்ளிகளை கொண்ட துணிக்கு முன் அதே வடிவமைப்பில் இருப்பதைபோல் கப்பை வைத்து உள்ளார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications