கண்களுக்கு சவால்! ஆரஞ்சு பழ சுளைக்குள் ”பூனைக்குட்டி” 4 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க கில்லி தான்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூனைக்குட்டி ஒன்று மறைந்திருக்கிறது. ஆரஞ்சு பழ சுளைகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் இந்த பூனைக்குட்டியை 4 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால். 4 செகண்டுக்குள் கண்டுபிடித்தால் நீங்க கில்லி தான்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் சவால் மிக்கவை. நமது கண்களை குழப்பி, மூளையை கசக்கி பிழிய வைத்துவிடும். அதாவது செஸ் விளையாடும் போது நமது முழு கவனமும் எப்படி அந்த போட்டியின் மீது இருக்க வேண்டுமோ அதேபோல கூர்மையாக பார்த்தால்தான் உடனே விடையை கண்டுபிடிக்க முடியும் என்று சொல்லும் அளவிற்கு சவால் மிக்கவையாக இல்யூஷன் படங்கள் அமைந்துள்ளன.

இந்த இல்யூஷன் படங்களில் மறைந்து இருக்கும் பொருளை கண்டுபிடிப்பது, கணிதவியல் புதிர், ஒருவரின் சிந்திக்கும் கோணத்தை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்பது கணிப்பது என பல்வேறு விதமான புதிர் படங்கள் இணையத்தில் உலவுகின்றன. ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்களும் தங்களுக்கு பயனுள்ள பொழுதுபோக்காக இந்த புதிர் படங்கள் அமைந்து இருப்பதால் இதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் இது கொஞ்சம் சவாலானாதாக தெரியும். இந்த இல்யூஷன் படங்களுக்கு சரியாக விடையை கண்டுபிடிப்பதை வைத்து ஒருவரின் சிந்தனைத்திறன், அறிவாற்றல் ஆகியவற்றைக் கூட ஓரளவு கணித்துவிட முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இல்யூஷன் படத்திற்கு விடையை கண்டுபிடிக்கும் நெட்டிசன்கள் தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து அவர்களுக்கும் ஜாலியாக சவால் விடுப்பதை காண முடிகிறது.
இதனால், வாட்ஸ் அப் உள்ளிட்ட குழுக்களிலும் இந்த இல்யூஷன் படங்கள் அதிகம் பகிரப்படுவதை பார்க்க முடிகிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூனைக்குட்டி ஒன்று மறைந்திருக்கிறது. இந்த பூனைக்குட்டியை கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 4 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா?..
உங்களுக்கான டைம் தொடங்கியது.. படத்தை நன்கு உற்று கவனியுங்கள். ஆரஞ்சு பழ சுளைகள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டுள்ளன. படம் முழுவதுமே ஆரஞ்சு பழ சுளைகள் மட்டுமே நம் கண்களுக்கு தெரிகிறது அல்லவா.. ஆனால் இந்த படத்தில் பூனைக்குட்டி ஒன்று இருக்கிறது.. ஆமாம் இது நிஜம் தான். ஆனால் அப்படி தெரியவில்லையே என நீங்கள் நினைக்கலாம். இது தான் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம்.
நம் கண்களுக்கு தெரியாத ஒன்றை இருப்பது போல் காட்டும் மாயாஜால படம் தான் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம். எப்படி சாலையில் செல்லும் போது தூரத்தில் நம் கண்களுக்கு கானல் நீர் தெரியுமோ அது போன்று தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களிலும் தெரியும். சரி உங்களுக்கான நேரம் முடிந்தது.. குறிப்பிட்ட 4 செகண்டுக்குள் பூனைக்குட்டி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்கள் கில்லி தான்.
ஆனால் எங்கு தேடியும் இல்லை என்பவர்கள்.. இன்னும் கொஞ்சம் கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு தேடிப்பாருங்கள்.. பூனைக்குட்டியே இல்லை என்று மட்டும் நினைக்க வேண்டாம். படத்தின் ஒரு பகுதியையும் விடாமல் தேடினாலே போதும் எளிதில் கண்டுபிடித்து விடலாம். இப்படியும் விடையை கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம். அதாவது படத்தை ஜூம் செய்து பார்த்தால் பூனைக்குட்டி இருக்கும் இடம் தெரிந்துவிடும்.
அட ஆமா.. பூனைக்குட்டி படத்தில் இருக்கிறதே என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. சரியான விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். இன்னும் விடையை கண்டுபிடிக்காதவர்கள் படத்தில் பூனைக்குட்டி இருக்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. ஜூம் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.













Click it and Unblock the Notifications