மொழிதான் நம் தனித்துவம்! இரவில் புத்தாண்டு வாழ்த்து கூறிய கமல்! தாமதத்துக்கு காரணம் தெரியுமா?
சென்னை: ‛‛நம் தனித்துவம் என்பது நமது மொழி தான். அதன் அடையாளமாக தமிழ் புத்தாண்டை மேலதிக உற்சாகத்தோடு கொண்டாடுவோம்'' என இன்று இரவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. 'பிலவ' ஆண்டு விடைபெற்று புதிதாக 'சுபகிருது' புத்தாண்டு பிறந்துள்ளது. பொதுமக்கள் கோவில்களில் தரிசனம் செய்து புத்தாண்டை கொண்டாடினர்.
மேலும் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், நடிகர், நடிகைகளும் பொதுமக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கமல் புத்தாண்டு வாழ்த்து
அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவருமான நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‛‛அதிகாரபூர்வ அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்களே குடிமக்களின் தனித்துவத்தை கேலி செய்யும் விதமாக பேசி பார்க்கும் கொடுங்காலம் இது. நம் தனித்துவம் நம் மொழி. அதன் அடையாளமாக தமிழ் புத்தாண்டை மேலதிக உற்சாகத்தோடு கொண்டாடுவோம்'' என குறிப்பிட்டுள்ளார்.

யார் மீது விமர்சனம்
மத்திய அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் ‛‛ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழி பேச வேண்டும்'' என கூறியிருந்தார். இதை தான் அதிகாரப்பூர்வ அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்களே குடிமக்களின் தனித்துவத்தை கேலி செய்யும் விதமாக பேசி பார்க்கும் கொடுங்காலம் என மறைமுகமாக கமல் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

நேர வித்தியாசம் ஏன்
கமல்ஹாசனின் இந்த டுவிட்டர் பதிவுக்கு அவரது கட்சியினர், ரசிகர்கள், பொதுமக்கள் என அஅனைத்து தரப்பினரும் லைக் செய்து வருகின்றனர். மேலும் அவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறி வருகின்றனர். அதேநேரத்தில் சிலர் இன்று தமிழ் புத்தாண்டு இல்லை எனவும், தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் இப்போது தான் விடிந்ததா என கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு அவரது ரசிகர்கர் கமல் அமெரிக்காவில் இருப்பதால் தான் இத்தகைய நேர வித்தியாசம் என கூறி வருகின்றனர்.

மோடி வாழ்த்து
முன்னதாக பிரதமர் நரேந்திரமோடி தமிழ் மொழியில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில், ‛‛அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். குறிப்பாக எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு. வரும் புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோஷங்களையும் தரட்டும். அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துக்கள்'' என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications