சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்களுக்கு வரப்பிரசாதம்.. சென்னை ஐஐடி- அடையாறு புற்றுநோய் மையம் இணைந்து சூப்பர் முயற்சி

Google Oneindia Tamil News

சென்னை: கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான கருவியை உருவாக்க சென்னை ஐஐடி கல்வி நிறுவனம், சென்னை அடையாறு புற்றுநோய் இன்ஸ்டிடியூட் உடன் ஒத்துழைப்பது என்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டால் உண்மையில் பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான தொழில்நுட்பத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் சரிபார்ப்பதற்கும் சென்னை ஐஐடியுன் அடையாறு புற்றுநோய் மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

கருப்பை புற்றுநோய் பெண்களின் புற்றுநோயுடன் தொடர்புடைய இறப்புக்கு முக்கிய காரணமாகும். 2020 ஆம் ஆண்டில் உலகளவில் புதிய பாதிப்பு எண்ணிக்கை 314000 ஆக இருந்தது, இந்தியாவில் அது 44000 ஆக உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு

எவ்வளவு மரணம்

எவ்வளவு மரணம்

2020 ஆம் ஆண்டில் கருப்பை புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 207000 ஆக உள்ளது. இந்தியாவில் அது 32077 ஆக இருந்தது (இறப்புகளில் முந்தைய ஆண்டுகளில் கண்டறியப்பட்ட நோயாளிகளும் அடங்குவர்). ஆகவே இது ஒரு சைலண்ட் கில்லர் என்பதால் பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறிகளும் இல்லை.

சாத்தியமில்லை

சாத்தியமில்லை

லேசானா அறிகுறிகள் மட்டுமே தெரிகிறது. இதன் விளைவாக பெரும்பாலான நோயாளிகள் நோய் தீவிரமான பின்னரே வருகிறார்கள் இதற்கு காரணம் கருப்பை புற்றுநோயை கண்டுபிடிக்கும். கூடுதலாக, நம்பகமான கருவிகளோ அல்லது புதிய சோதனை முறைகளோ இல்லை. எனவே தான் கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது சாத்தியமில்லை.

ஐஐடி மெட்ராஸ் அதிரடி

ஐஐடி மெட்ராஸ் அதிரடி

இந்நிலையில் தான் கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்பிய அடையாறு புற்றுநோய் மையம் சென்னை ஐஐடியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஜூலை 29ம் தேதி நடந்த இந்த ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது புற்றுநோய் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் செல்வலுக்ஸ்மி மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் டீன் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி பேராசிரியர் ரவீந்திர கெட்டு ஆகியோர் தலைமை ஆய்வாளர்களான டாக்டர் வி.வி.ராகவேந்திர சாய், இணை பேராசிரியர் (பயோமெடிக்கல் இன்ஜினியரிங்), அப்ளைடு மெக்கானிக்ஸ் துறை, ஐஐடி மெட்ராஸ், மற்றும் டாக்டர் டி ராஜ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 எபிடெலியல்

எபிடெலியல்

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியின் கீழ், புற்றுநோய் நிறுவனத்தில் (WIA) மூலக்கூறு புற்றுநோயியல் துறை இரத்தத்தில் கண்டறியக்கூடிய புரதங்களை அடையாளம் காண ஆராய்ச்சியை மேற்கொண்டது. இதில் உள்ள எபிடெலியல் கருப்பை புற்றுநோயைக் கண்டறிய உதவுகிறது, இது கருப்பை புற்றுநோய்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது தெரியவந்தது.

மாதிரிகள்

மாதிரிகள்

இதையடுத்தே கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான கருவியை உருவாக்க சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முன்வைந்துள்ளது. இது குறித்து பேசிய புற்றுநோய் நிறுவனத்தின் மூலக்கூறு புற்றுநோயியல் துறை பேராசிரியரும் தலைவருமான டாக்டர் டி.ராஜ்குமார், "கருப்பை புற்றுநோய்க்கான ஆரம்பகால நோயறிதல் பயோமார்க்ஸர்களை அடையாளம் காண்பதற்காக கருப்பை புற்றுநோய் நோயாளிகளிடமிருந்து இரத்த மாதிரிகள் பயன்படுத்தினோம். இதில் 20 நோயாளிகளுக்கு கருப்பை புற்றுநோய் இருப்பதற்கான எபிடெலியல் புரதங்கள் இருப்பது தெரியவந்தது. அதேநேரம் 238 பேர் ஆரோக்கியாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது என்றார்

கண்டுபிடிப்போம்

கண்டுபிடிப்போம்

ஐ.ஐ.டி மெட்ராஸின் பமெக்கானிக்ஸ் துறையின் இணை பேராசிரியர் (பயோமெடிக்கல் இன்ஜினியரிங்) டாக்டர் வி.வி.ராகவேந்திர சாய் கூறுகையில், "அடையாறு புற்றுநோய் மையத்துடன் இணைந்து பணியாற்றுவது என்பது சிக்கல்களைப் பற்றிய ஆழமான புரிதலை நோக்கி மருத்துவர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. வலுவான நோயறிதல் மற்றும் வலுவான அமைப்புகளை உருவாக்க இந்த உயரிய அனுபவத்திலிருந்து பெறமுடியும். சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள், நோய்கான சாத்தியக்கூறுகளைக் காணவும், தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வழிகாட்டவும் மருத்துவர்களுக்கு உதவும். கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க தனிக்கருவியை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்" என்றார்.

English summary
Indian Institute of Technology Madras is going to collaborate with the Cancer Institute (WIA) at Adyar in Chennai, Tamil Nadu, to develop a point-of-care device for early diagnosis of Ovarian Cancer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X