பிரதமர் மோடி தினந்தோறும் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.. ப.சிதம்பரம் கிண்டல்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தினந்தோறும் தனது பிறந்தநாளை கொண்டாடட்டும், அப்படியாவது கொரோனா தடுப்பூசி அதிக மக்களுக்குக் கிடைக்கட்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 71வது பிறந்தநாளை நேற்றுக் கொண்டாடினார். இதையொட்டி நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கிராமம் கிராமமாக சென்று பாஜக தொண்டர்கள், மக்களை தடுப்பூசி போடும் இடங்களுக்கு அழைத்து வந்தனர்.

பாஜக ஆளும் மாநிலங்கள்
மேலும், பாஜக ஆளும் மாநிலங்கள் பலவும் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடும் அளவை குறைத்துக் கொண்டு அந்த தடுப்பூசிகளை மொத்தமாக நேற்று செலுத்தின. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் இரண்டரை கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது ஒரு உலக சாதனையாகும். ஒரே நாளில் இதுவரை எந்த நாடும் இந்த அளவுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை.

தினந்தோறும் கொண்டாடுங்கள்
இந்த நிலையில்தான் பா.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி தினந்தோறும் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று கிண்டலாக கூறியுள்ளார். இது பற்றி அவர் தெரிவித்திருப்பதை, நீங்களே பாருங்கள்: உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய பாஜக ஆளும் மாநிலங்கள் பிரதமரின் பிறந்தநாள் தினத்தன்று தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் செலுத்தும் தடுப்பூசி அளவைவிட நேற்று அதிக அளவுக்கு இந்த மாநிலங்கள் செலுத்தியுள்ளன. ஆனால் மற்ற நாட்களில் அவை செயல்படாத மாநிலங்களாக இருக்கின்றன. எனவே பிரதமர் நரேந்திர மோடி தினந்தோறும் தனது பிறந்தநாளை கொண்டாடும். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சராசரி அளவு இதுதான்
இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 70 முதல் 80 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. பிரதமரின் பிறந்தநாளை ஒட்டி அதைவிட சுமார் மூன்று மடங்கு அளவுக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாட்களில் ஒரு கோடி என்ற தினசரி சராசரி அளவுக்கு தடுப்பூசி போடும் பணிகள் வந்து சேரவில்லை.

சமூக இடைவெளி இல்லை
ஒரே நாளில் அதிகப்படியான தடுப்பூசி போடப்பட்டதால் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் தடுப்பூசி மையங்களில் குவிந்தனர். இது நோய்களுக்கு வழிவகுக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை பிறப்பித்தனர். இந்த நிலையில்தான், ப.சிதம்பரம் இந்த சாதனை அளவு விஷயத்தை கிண்டல் செய்துள்ளார்.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications