நஞ்சை நிலங்களுக்கு NOC பெற புதிய ரூல்ஸ்.. அரசாணை வெளியானது.. அடுத்து ஹென்றி வைத்த முக்கிய கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நஞ்சை நிலங்களை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான புதிய நடைமுறையை தமிழக அரசு விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று FAIRA நிறுவனர் டாக்டர் ஹென்றி கோரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைன் ஒற்றைச் சாளர வசதியை முழுமையாக செயல்படுத்துவதுடன், விண்ணப்பங்களைப் பரிசீலிக்க காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பெயிரா நிறுவனர் டாக்டர் ஹென்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில், "தமிழகத்தில் திட்டமிடப்படாத பகுதிகளில் உள்ள நஞ்சை நிலங்களை விவசாயம் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றுவதற்கான அனுமதி பெறும் நடைமுறையில் தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது. இதற்கான அரசாணை எண் 201-ஐ வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நவம்பர் 4-ம் தேதி வெளியிட்டுள்ளது.

Paddy Land NOC Rules

நஞ்சை நிலங்கள்

இதற்கு முன்பு, நஞ்சை நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான தடையின்மைச் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாகப் பெற வேண்டியிருந்தது. இதனால் விண்ணப்பதாரர்கள் பல்வேறு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய நிலையும், அனுமதி கிடைப்பதில் காலதாமதமும் ஏற்பட்டது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையின்படி, மூன்று துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் இருந்து தடையின்மைச் சான்றிதழ் பெற வேண்டும். அதன்படி, வருவாய்த் துறையின் வருவாய் கோட்டாட்சியர் (RDO), வேளாண்மைத் துறையின் இணை இயக்குநர் மற்றும் நீர்வளத் துறையின் செயற்பொறியாளர் ஆகியோரிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் ஒற்றைச் சாளர முறையில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பட்டா, சிட்டா, அடங்கல், உரிமை ஆவணங்கள், நிலத்தின் வரைபடம், வடிகால் வரைபடம் உள்ளிட்ட தொடர்புடைய ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.

FAIRA-வின் கோரிக்கை

நஞ்சை நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான அனுமதி பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பான FAIRA நீண்டகாலமாகக் கோரி வந்தது. குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாகப் பெறப்பட்டு வந்த தடையின்மை சான்றிதழுக்கு அபதிலாக, சம்பந்தப்பட்ட மூன்று துறை அதிகாரிகளிடம் இருந்து சான்றிதழ் பெறும் முறையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்தக் கோரிக்கை தொடர்பாக சட்டமன்றத்தில் கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், அதற்கான அரசாணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு FAIRA சார்பில் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.

தமிழக அரசு அரசாணை

தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள டாக்டர் ஹென்றி, தமிழக அரசுக்கும் குறிப்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய நடைமுறை விரைவாகச் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றும், ஆன்லைன் ஒற்றைச் சாளர விண்ணப்ப வசதியை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது, பரிசீலிப்பது மற்றும் அனுமதி வழங்குவது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடுவதுடன், விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிப்பதற்கான காலக்கெடுவையும் அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாற்றங்கள் முறையாகச் செயல்படுத்தப்பட்டால், ரியல் எஸ்டேட் வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமின்றி, தொழில் முதலீடுகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் விரைவாகச் செயல்படுத்த உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+