பாரிவேந்தருக்காக டெல்லியில் நடந்த பஞ்சாயத்து! இரட்டை இலை Vs தாமரை! இழுபறியில் இறுதி முடிவு!
சென்னை: அதிமுக -பாஜக கூட்டணியிடையே ஏற்பட்டுள்ள விரிசல் யாரை கலக்கம் அடையச் செய்துள்ளதோ இல்லையோ, இரண்டு கட்சிகளையும் நம்பி பயணித்து வரும் பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், தேவநாதன் யாதவ் உள்ளிட்டோரை கலக்கம் அடையச் செய்துள்ளது.
ஏனெனில் இவர்கள் அனைவரும் இந்த 2 கட்சிகளையும் நம்பி நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் திட்டத்தில் இருந்து வருவது தான். இந்தச் சூழலில் கடந்தமுறை பெரம்பலூரில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரிவேந்தர், இந்த முறை அதிமுக பாஜக கூட்டணி சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் களம் இறங்கும் திட்டத்தில் இருந்து வருகிறார்.

ஆத்தூர் அருகே உள்ள பாரிவேந்தரின் பூர்விக கிராமம் கள்ளக்குறிச்சி தொகுதிக்குள் வருவதே அவர் அங்கு போட்டியிட விரும்புவதற்கான காரணமாகும். எல்லாம் சரி, பாரிவேந்தர் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்பது தான் இப்போது எழுந்துள்ள பஞ்சாயத்தாகும். இவரை தாமரைச் சின்னத்தில் போட்டியிட வைக்க பாஜக முயற்சித்து வருகிறது.
திமுக எப்படி கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் களமிறக்கியதோ அதேபோல் இந்தமுறை இரட்டை இலை சின்னத்தில் பாரிவேந்தரை களமிறக்க அதிமுக முனைப்பு காட்டுகிறது. எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்ற பஞ்சாயத்தில், நீங்களாக பேசி ஒரு முடிவுக்கு வாங்க என பாரிவேந்தர் ஒதுங்கிக் கொண்டார்.

அதற்குள் அதிமுக பாஜக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுவிட்டதால் சின்னம் தொடர்பான பஞ்சாயத்தை பற்றி பேச இப்போதைக்கு வாய்ப்பில்லை. இதனிடையே வேலூர் தொகுதியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications