Parasakthi: சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.. ஜனநாயகனுடன் நேரடியாக மோதும் பராசக்தி.. படக்குழு அப்டேட்
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலில் பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி 10 ஆம் தேதி பராசக்தி படம் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விஜய்யின் ஜனநாயகன் படம் ஜன 9 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், 10 ஆம் தேதி பராசக்தி ரிலீஸ் செய்யப்படுகிறது.
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வரும் ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பராசக்தி படமும் விஜய் படத்துக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளது.

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்
தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளிலும் படங்களும் வரிசை கட்டி இறங்கும். மக்களும் பண்டிகைகளை கொண்டாடிவிட்டு, குடும்பம் குடும்பமாக சென்று திரையரங்குகளில் தங்களுக்கு பிடித்த படங்களை பார்த்து ரசிப்பார்கள். இதனால் பண்டிகை நாட்களில் எந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்த்து காத்து இருப்பார்கள்.
அந்த வகையில் வரும் பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வெளியாக உள்ளது. ஜனநாயகன் தான் எனது கடைசி படம் என்று கூறிய விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறார். இதனால் அவரது கடைசி படமான ஜனநாயகன் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி
பொங்கல் பண்டிகை வரும் ஜன 15 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அதற்கு 6 நாட்கள் முன்னதாக வரும் ஜன 9 ஆம் தேதியே படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இனிமேல் விஜய் படம் நடிக்க மாட்டார் என்பதால் இந்த படத்தை கொண்டாட விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் தயாராகி உள்ளனர். இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் ஜனநாயகனுக்கு போட்டியாக வரும் 10 தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

முதலில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதாவது ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.
விநியோகஸ்தர்கள் கோரிக்கை
விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் முன்கூட்டியே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் முன்கூட்டியே ரிலீஸ் ஆவதால், விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் சிவகார்த்திகேயேயனின் பராசக்தி படம் நேரடியாக மோதுகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் ரெட் ஜெயன்ஸ்ட் தயாரிப்பில் பராசக்தி படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவியும் இந்த படத்தில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரீலீலா, நடிகர் அதர்வா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் கூட இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.
துப்பாக்கி கொடுத்த விஜய்
ஜனநாயகன் படத்திலும் விஜய்யின் தளபதி கச்சேரி, ஒரு பேரே வரலாறு ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோட் திரைப்படத்தின் போது விஜய் ஒரு காட்சியில் துப்பாக்கியை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கியிருந்தார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் இனி திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருப்பதால் அவரது இடத்தை இனி சிவகார்த்திகேயன் தான் நிரப்புவார் என்பதற்காக விஜய் அவரிடம் துப்பாக்கியை கொடுத்ததாக பரவலாக பேசப்பட்டன. இந்த நிலையில் விஜய்க்கு போட்டியாகவே தற்போது சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications