ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் விவகாரம்.. டிரம்ப் சண்டையை நிறுத்தினாரா? மக்களவையில் இன்று விவாதம்.. பரபர
சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியவாறே உள்ளன. இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. இந்த அமளிக்கு இடையில், நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று அதாவது ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தை தொடர்ந்து பஹல்காம் தாக்குதல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் நாடாளுமன்றத்தில் ஜூலை 29-ல் இது விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 21 முதல் மழைக்கால கூடத்தொடர் தொடங்கியது .. இந்த கூட்டத்தொடரானது.. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் வணிகக் கப்பல் மசோதா, தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா போன்ற 8 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
எனினும் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் தொடர்ந்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் அலுவல் எதையும் கவனிக்காமல் நாடாளுமன்றம் முடங்கியது. இதையடுத்து, மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.
எனவே, 2வது வாரத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து 16 மணிநேரம் விவாதிக்க நாடாளுமன்றத்தில் திட்டமிடப்பட்டுள்ளது... அந்தவகையில், லண்டன் பயணம் முடிந்த பிறகு நடைபெறும் என்றும் ஜூலை 29ம் நாள் 16 மணி நேர விவாததில் பிரதமர் பங்கேற்பார் என்றும் அறவிப்பு வெளியாகியிருந்தது..
2 அவைகளிலும் காரசாரம்
அந்தவகையில் இன்று விவாதம் தொடங்குகிறது. இரு அவைகளிலும் தலா 16 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நேரம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.. எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி, மக்களவையில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து இன்று விவாதம் நடக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் தங்கள் தரப்பில் தீவிரமாக பேசக்கூடிய தலைவர்களை களமிறக்கும் என தெரிகிறது.
ஆளுங்கூட்டணி தரப்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்று பேசுவாரர்கள். பிரதமர் மோடியும், தேச பாதுகாப்பு தொடர்பான தனது அரசின் வலுவான நிலைப்பாடு பற்றி அவ்வப்போது குறுக்கிட்டு பேசுவார் என்று தெரிகிறது.
காஷ்மீர் துப்பாக்கிச்சூடு
அதேபோல, எதிர்க்கட்சிகள் தலைவர்களான ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தங்கள் வாதங்களை முன்வைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரம் மாதம், ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே 7ம் இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தேதி தாக்குதல் நடத்தின.
மத்தியஸ்தம் செய்தாரா டிரம்ப்
இதனைத் தொடர்ந்து 2 நடுகளுக்கும் இடையே எல்லை பதற்றங்கள் ஏற்பட்டது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான தாக்குதலை மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாகவும், இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதே நான்தான் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திரும்பத்திரும்ப சொல்லி வருவதாலும், எதிர்க்கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து விமர்சித்து வருகின்றன.. எனவேதான், பிரதமர் மோடி இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வந்தன.
இந்த சூழலில்தான், நேற்றைய தினம் மக்களவையில் அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, "ஆபரேஷன் சிந்தூர் விவாதத்துக்கு பிறகு இதர விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது" என்றார்..
ராஜ்நாத் சாங் சிங் பேச்சு
இதன்பிறகு, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, "ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 22 நிமிடங்களில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன்பிறகு இந்திய எல்லை பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.
வெளிநாட்டு (அமெரிக்க) அழுத்தம் காரணமாக போர் நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. இந்திய ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டது. இந்திய ராணுவ டிஜிஎம்ஓ-வை பாகிஸ்தான் டிஜிஎம்ஓ தொடர்பு கொண்டு போரை நிறுத்த கோரினார். இதன்பிறகு தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய ராணுவ தரப்பில் ஓர் உயிரிழப்பு கூட ஏற்படவில்லை" என்றார்.
இதையடுத்து, காங்கிரஸ்எம்.பி.கவுரவ் கோகோய் பேசும்போது, பஹல்காம் தாக்குதலை நடத்திய 5 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் எப்படி ஊடுருவினர்? 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி? ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது என்ன நடந்தது என்பன குறித்த கேள்விகளுக்கு விளக்கமே இல்லையே?
டிரம்ப் 26 முறை பேச்சு?
பாகிஸ்தானின் பின்னால் சீனா இருந்ததாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியிருக்கிறது.. ஆனால், சாட்டியது. ஆனால் சீனா பற்றி மத்திய அரசு எதுவுமே சொல்லவில்லையே? எனவே, இதற்கெல்லாம் அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், பிரதமர் மோடியும் பதில் அளிக்க வேண்டும் என கேள்விகளை எழுப்பினார்..
ஏப்ரல் 22-ம் தேதி முதல் ஜூன் 17-ம் தேதி வரை பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் எந்த வகையிலும் பேசாதபோது, ட்ரம்ப் அழுத்தம் கொடுத்தார் என்று எப்படி சொல்ல முடியும்? என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் என கேள்வி எழுப்பியிருந்தார்.. எனவே, மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் இன்றைய தினம் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பதிலளிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மதியம் மத்திய அமைச்சர் அமித் ஷா விவாதத்தில் பங்கேற்கிறார். இன்று இரவு பிரதமர் மோடி பதில் அளித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications