Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிருஷ்ண ஜெயந்தி 2020: கிருஷ்ணரைக் கொண்டாடும் ஜெயந்திகளை வாழ்த்திய பார்த்திபன்

ஆண் பெண் என்ற பேதமற்றவனே கிருஷ்ணன் என்று நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கூறியுள்ளார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கலர்புல்லாங்குழலான, ரொமான்டிக்கான கிருஷ்ணரை நமக

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிருஷ்ணரைக் கொண்டாடும் ஜெயந்திகளுக்கும்,ஜெயந்திகளைக் கொண்டாடும் கிருஷ்ணர்களுக்கும் புல்longகுழல் இசைத்தது போன்ற இனிமையான வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் நடிகர் பார்த்திபன். கலர்புல்லாங்குழலான, ரொமான்டிக்கான கிருஷ்ணரை நமக்கு பிடித்து விட்டது என்றும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி இன்று தமிழ்நாட்டிலும் வட இந்தியாவில் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. முதல்வர், ஆளுநர் ஆகியோர் தமிழக மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறியுள்ளனர்.

சமூக வலைத்தள பக்கங்களில் கிருஷ்ணரின் புகைப்படங்களை பதிவிட்டு பலரும் வாழ்த்து கூறியுள்ளனர். பலரின் வீடுகளில் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வழக்கமான பாணியில் வாழ்த்து கூறியுள்ளார்.

இனிமையான கீதம்

இனிமையான கீதம்

'எனை என்ன செய்தாய்...வேய்ங்குழலே!'
Cherry blossom
ராக சுதா ரச சௌந்தர்ய ராஜ கீதம்

என்று அவரது இவண் படத்தில் வரும் ஒரு பாடரின் வரியை பதிவிட்டுள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

கிருஷ்ணரைக் கொண்டாடும் ஜெயந்திகளுக்கும்,ஜெயந்திகளைக் கொண்டாடும் கிருஷ்ணர்களுக்கும் புல்longகுழல் இசைத்தது போன்ற இனிமையான வாழ்த்துகள்! (ஜெயந்திகள்=ராதைகள்=பெண்கள்!)

கலர்புல் கண்ணன்

கலர்புல் கண்ணன்

பெண் ஆண் என்ற பேதமற்றவனே கிருஷ்ணன். ஜீவாத்மா,பரமாத்மா, வணங்குபவன், வணங்கப்படுபவன் என்ற நிலைகளை கடந்ததே கிருஷ்ண தத்துவம். தத்துவத்தை விட, colourபுல்-லாங்குழலான, romantic-கான கிருஷ்ணனை நமக்கு பிடித்து விட்டது. கொண்டாடுவோமே!!! இவ்வண்ணம் வாழ்த்தும் ராதா+கிருஷ்ணன் பார்த்திபன்.

வாழ்த்திலும் பார்த்திபன் டச்

வாழ்த்திலும் பார்த்திபன் டச்

நடிகர் பார்த்திபன் பேசினாலும் சரி எழுதினாலும் சரி அது அனைவராலும் ரசிக்கப்படும். தனக்கென புதிய பாதையை வகுத்துக்கொண்டு செயல்படுபவர். இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்திலும் தனது வழக்கமான பாணியை புகுத்தி அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+